இளம் தாய் பிரசுவித்த சிசுவை பையில் மறைத்து வைத்த குற்றத்தில் தந்தை (அரூஸ்) கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இளம் தாய் பிரசுவித்த சிசுவை பையில் மறைத்து வைத்த குற்றத்தில் தந்தை (அரூஸ்) கைது.


-ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலமானது நேற்று (15) மாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது காதலித்து  திருமணமான உரிய இளம் தம்பதிகளின் சிசு எனவும் சிசுவை வீட்டில் வைத்து பிரசவித்த நிலையில் காட்டுப் பகுதியில் பேக் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரனையின் போது தெரியவருகிறது.

திருமணமான கணவன் வயது (20),மனைவி வயது (17) ( அரூஸ் - சம்சாத் பானு ) தம்பதிகளில் கணவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

பிள்ளை பிரசவித்ததன் பின் வைத்தியசாலைக்கு தாய் வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளதாகவும், இரத்தப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக வைத்தியசாலை ஊடாக தம்பலகாம பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து கணவன் நேற்று முன்தினம்(14) முதல் விசாரனை செய்யப்பட்டதன் பின்பு இருவரும் வசித்து வந்த வீட்டின் பின் புறம் உள்ள காட்டுப் பகுதியில்  சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவ இடத்திற்கு கந்தளாய் நீதிமன்ற நீதவான் திருமதி தேனபது சென்று சட்ட நடவடிக்கைக்காக சடலம் பிரேத அறைக்கு அனுப்பப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கந்தளாய் தடயவியல் பொலிஸார் மற்றும் தம்பலகாம பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் தாய் பிரசுவித்த சிசுவை பையில் மறைத்து வைத்த குற்றத்தில் தந்தை (அரூஸ்) கைது. இளம் தாய் பிரசுவித்த சிசுவை பையில் மறைத்து வைத்த குற்றத்தில்  தந்தை (அரூஸ்) கைது. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5