உயிர்த்த ஞாயிர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐக்­கிய அரபு அமீ­ரகத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் .


(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­திய
பிர­தான பயங்­க­ர­வா­தி­யான ஸஹ்ரான் ஹாஷிமின் பிர­தான இரு சகாக்­களை ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்று கைது செய்­துள்ள சி.ஐ.டி. சிறப்­புக்­குழு அவர்­களை இலங்­கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.


குறித்த தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து நாட்­டி­லி­ருந்து தப்­பி­யோ­டி­ய­தாகக் கூறப்­படும் இரு­வரே இவ்­வாறு அழைத்து வரப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தற்­கான அனு­ம­தியை நேற்று பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.


நான்கு நாட்­க­ளுக்கு முன்னர், சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் காவிந்த பிய­சேன தலை­மையில் பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார மற்றும் சார்ஜன்ட் நத்­தலால் உள்­ளிட்ட குழு­வினர் இவர்­களைக் கைது செய்ய ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­துக்குச் சென்­றுள்­ளனர்.


இந்­நி­லை­யி­லேயே அந்­நாட்டு பாது­காப்புப் பிரிவின் ஒத்­து­ழைப்­புடன் குறித்த இரு­வ­ரையும் கைது செய்­துள்ள அவர்கள், சந்­தேக நபர்­களை துபா­யி­லி­ருந்து நாட்­டுக்கு அழைத்து வந்­தனர்.

நாவ­லப்­பிட்டி – ஹப்­பு­கஸ்­த­லாவை பகு­தியைச் சேர்ந்த 30 வய­தான மொஹம்மட் சலீம் அப்துல் சலாம்,
ஹம்­பாந்­தோட்டை பகு­தியைச் சேர்ந்த 37 வய­தான மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ்
ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு துபா­யி­லி­ருந்து அழைத்து வரப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக நான்காம் மாடியின் குறித்த உயர் அதி­காரி கூறினார்.


நேற்­றைய தினம் அவ்­வி­ரு­வரும் சட்ட வைத்­திய அதி­காரி ஒருவர் முன்­னி­லை­யிலும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு அறிக்­கையும் பெறப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் வெளி­நா­டு­களில் இருந்த பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் 6 பேர் நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள நிலையில் இவர்கள் இரு­வ­ருடன் சேர்த்து அந்த எண்­ணிக்கை தற்­போது எட்­டாக உயர்ந்­துள்­ளது.


இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 65 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு விவ­கா­ரத்தில் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டமை, உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வு­களின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.


ஏற்­கெ­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து, கடந்த ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ரி­லி­ருந்து சி.ஐ.டி. நாட்­டுக்கு அழைத்து வந்­தது.
30 வய­தான புதிய காத்­தான்­குடி – 2 எனும் முக­வ­ரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஆயுத பிரிவுத் தலை­வ­னாக கரு­தப்­படும் ஹயாது மொஹம்மட் அஹமட் மில்ஹான் அல்­லது மொஹம்மட் மில்ஹான், 34 வய­தான மரு­த­முனை – 3 ஐச் சேர்ந்த மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 47 வய­தான மொஹம்மட் முஹிதீன் மொஹம்மட் சன்வார் சப்றி, 29 வய­தான காத்­தான்­குடி – 1 ஐச் சேர்ந்த மொஹம்மட் இஸ்­மாயில் மொஹம்மட் இல்ஹாம், , அனு­ரா­த­புரம் கெப்­பித்­தி­கொல்­லேவைச் சேர்ந்த 37 வய­தான அபு­சாலி அபூ­பக்கர் ஆகிய ஐந்து பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களே சவூ­தியில் இருந்து இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­ட­வர்­க­ளாவர்.


அதன் பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்­தப்­பட்ட மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் எம் றியாஸ் எனும் சந்­தேக நபர் சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணிய இலங்­கை­யர்­களின் வலை­ய­மைப்பின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் ஒரு­வரை, 21/4 உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கத்தார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.


மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் எனும் குறித்த சந்­தேக நபரே இவ்­வாறு கத்தார் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமா அத் முக்­கிய உறுப்­பினர் பஸ்ஹுல் ஸஹ்­ரானும் குறித்த சந்­தேக நபரும் கட்­டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி பேணி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்ள நிலையில், கட்­டாரில் தடுப்பில் உள்ள சந்­தேக நபரை இலங்­கைக்கு அழைத்து வந்து விசா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.


இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே கத்­தாரில் தற்­போதும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்­சாப்­புடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹம்மட் றியாஸ் என்பவர் கத்தார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி சி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடை ச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
-மெட்ரோ -
உயிர்த்த ஞாயிர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐக்­கிய அரபு அமீ­ரகத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் . உயிர்த்த ஞாயிர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐக்­கிய அரபு அமீ­ரகத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் . Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.