ரஞ்சனின் குரல் பதிவுகளில் “ரிஷாத் பதியுத்தீன்”முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தொடர்பிலும் சில குரல் பதிவுகள்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நல்லாட்சி அரசில் பொன்னி அரிசி இறக்குமதி தொடர்பில் நிதி மோசடி பிரிவிற்கு ரிஷாத் பதியுத்தீன் வாக்குமூலம் அளித்ததாக ரஞ்சன் ராமநாயக பாராளுமன்றில் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத்  தொடர்பில் ரஞ்சன் காரசாரமாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரபலங்களிடம் விமர்சிக்கும் ஓடியோக்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தவிர ரனில் , சஜித் , ரவி , மலிக் உள்ளிட்ட பலரை ரஞ்சன் விமர்சிக்கும் ஓடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சனின் குரல் பதிவுகளில் “ரிஷாத் பதியுத்தீன்” ரஞ்சனின் குரல் பதிவுகளில் “ரிஷாத் பதியுத்தீன்” Reviewed by Madawala News on January 12, 2020 Rating: 5