அதிகாரிகள் சுயமாக முடிவெடுத்து மேற்கொள்ள கூடிய சாதாரண விடயங்களும் கூட அரசியல் ரீதியாகவே நோக்கப்படுகிறது.


அதிகாரிகள் சுயமாக முடிவெடுத்து மேற்கொள்ள கூடிய சாதாரண விடயங்களும் கூட அரசியல் ரீதியாகவே
நோக்கப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் எமது சமுதாயத்திற்கு தேவையான நல்ல விடயங்களை முன்னெடுப்பதில் அரசியல் பின்னணிகளை விடுத்து நேர்மையான முறையில் செயலாற்ற வேண்டும். அதேவேளை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படும் ஒவ்வொருவரும் தம்  சமுதாயத்தின் நலன்சார்ந்த  கல்வி சமூக சமய பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் செயற்படவேண்டும்  என்று சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.


கொக்குவில் கிழக்கு யாழ் விசன் கிருஸ்ணா அறநெறிப்பாடசாலையின் எட்டாவது ஆண்டு நிறைவு தினவிழா நேற்றையதினம் யாழ்விசன் பொறுப்பாளர் திரு.க.சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட று சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

சிவன் அறக்கட்டளை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்  முன்னாள் வடமாகாண ஆளுனரை சந்தித்து வடமாகாணத்தின் கல்வி சமூகவிழுமியங்களை கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களையும் அறநெறிப்பாடசாலைகளை வலுவூட்டி அக் கல்வியை ஊக்குவிக்கவும் மாணவர்கள் மத்தியில் யோகாசனக்கலையினை பயிற்றுவிப்பது தொடர்பிலுமான செயற்திட்டங்களையும் மேலும் பல செயற்திட்டங்களையும் முன்வைத்திருந்தோம்.


அது மட்டுமல்ல அறநெறி வகுப்புக்களை நடாத்துவதற்காக ஞாயிறு , போயா தினங்களில் தனியார் கல்வி நிலையங்களிற்கு விடுமுறை வழங்கவும் அறநெறி பரீட்சை மூலம் கிடைக்கும் புள்ளிகளை புலமைப்பரீட்சை க.பொ.த. சாதாரண மற்றம் உயர்தரப்பரீட்சை புள்ளிகளுடன் இணைக்கவும் திட்டத்தினை முன்வைத்திருந்தோம்.


இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் முஸ்லிம் இந்துமத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து அமைச்சரவைப்பத்திரத்தினை முன்வைக்கப் போவதாக புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்திருந்தார்.


தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கான அனுமதி பிரதேசசபைகளால் வழங்கப்படும் போது வாரத்தில் வெள்ளி ஞாயிறு தினங்களில் வகுப்புக்களுக்கான தடைவிதிப்பதற்கான அதிகாரம் பிரதேசசபைகளுக்கு உண்டு.  அதனை பிரதேசசபை தவிசாளர்கள் முன்னெடுக்கலாம.; இதனை நல்ல ஊரான நல்லூரில் இருந்து  முதலில் ஆரம்பித்து வைக்கலாமென நான் கருகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் கலந்து கொண்டதுடன் சின்மயா மிசன் சுவாமிகள், நல்லூர் ஆதீன முதல்வர் , முன்னாள் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் திரு.தவராசா மற்றும் நல்லூர் பிரதேசசபை தவிசாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்பால அலி
29-1-2019
அதிகாரிகள் சுயமாக முடிவெடுத்து மேற்கொள்ள கூடிய சாதாரண விடயங்களும் கூட அரசியல் ரீதியாகவே நோக்கப்படுகிறது. அதிகாரிகள் சுயமாக முடிவெடுத்து மேற்கொள்ள கூடிய சாதாரண விடயங்களும் கூட அரசியல் ரீதியாகவே நோக்கப்படுகிறது. Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.