முகக் கவசங்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை.


   முகக் கவசங்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.


   கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக் கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

   அத்துடன், முகக் கவசங்களை விரைவாகத் தயாரிக்குமாறும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


   கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளர் ஒருவர் இலங்கைக்குள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.


   கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள மருந்தகங்கள், வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கு முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


   சில இடங்களில் முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்துள்ளதுடன், அரச மருந்தகங்களில் முகக்கவசங்களின் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
   இதேவேளை, முகக்கவச விற்பனைச் சந்தையில், தற்போது மாஃபியாவாக மாறியுள்ளதாகவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.


 எவ்வாறாயினும், முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
முகக் கவசங்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை. முகக் கவசங்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை. Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.