கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது... எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை ; சீன அதிபர்


சீனாவில் கொரோனா வைரஸை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் சட்ட விரோதமாக விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது.

இதனால், வுகான் உள்ளிட்ட 18 நகரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 80 ஆக இருக்குமென நம்பப்படுகின்றது. மேலும், நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்நோய் வேகமாக பரவி வருவதால் மேலும் 1,300 படுக்கை  வசதி கொண்ட 2வது சிறப்பு வைத்தியசாலையை அடுத்த 15 நாட்களில்  கட்டி முடிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில்,  சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேற்று கூறுகையில், ``சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. அரசு மிக  துரிதமாக முடிந்த உதவிகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க இரண்டு சிறப்பு வைத்தியசாலைகள் விரைவில் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் எப்படி உருவானது என்று வைத்தியர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இராணுவ வைத்தியர்களும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர். தற்போது உறுதியாக சொல்லக் கூடிய ஒன்று, இந்த வைரஸ் பரவுவதை அரசால் தடுக்க  முடியவில்லை. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை,’ என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது... எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை ; சீன அதிபர் கொரோனா வைரஸ் வேகமாக  பரவி வருகிறது... எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை ; சீன அதிபர் Reviewed by Madawala News on January 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.