ரஞ்சன் உடன் தொலைபேசியில் உரையாடிய நீதிபதி சேவையில் இருந்து நீக்கப்பட்டார். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரஞ்சன் உடன் தொலைபேசியில் உரையாடிய நீதிபதி சேவையில் இருந்து நீக்கப்பட்டார்.


நீதி  துறையில் தொடர்பு பட்டவர்கள்    உடன் உரையாடிய மற்றும் சட்டவிரோதமான கட்டளைகளை இட்ட
குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடல்களை நடத்திய பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதேசமயம் இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தம்மிக்க ஹேமபாலவின் சேவை இடைநிறுத்தத்தினையடுத்து பத்தேகம நீதவானாக சிலாபம் மேலதிக நீதவான் ரக்கித அபேசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்
ரஞ்சன் உடன் தொலைபேசியில் உரையாடிய நீதிபதி சேவையில் இருந்து நீக்கப்பட்டார். ரஞ்சன் உடன் தொலைபேசியில் உரையாடிய நீதிபதி சேவையில் இருந்து நீக்கப்பட்டார். Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5