உளவளத்துனை உள்ளிட்ட பல்வேறு பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
பெண்கள் விவகார ,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் கீழ்  இயங்கி வரும்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் 2020 ம் ஆண்டுக்கான  பல்வேறு பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சீதுவையை தலைமையகமாக கொண்டு செயற்படும் இவ் நிறுவகத்தின் அம்பாறை, கிளிநொச்சி,அநுராதபுரம் ரண்ண (ஹம்பாந்தோட்டை ) ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலையங்களிலும் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் குறித்த பாடநெறிகள் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பட்டம், உயர் டிப்ளோமா, டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகளாக பாடநெறிகள் இடம் பெறவுள்ளன.

சமூகப் பணி முதுமாணி பாடநெறி இரு வருடங்களை கொண்ட ஆங்கில மொழி மூலமும், சமூகப் பணி உயர் டிப்ளோமா, உளவளத் துனை உயர் டிப்ளோமா பாடநெறிகள் தமிழ், சிங்கள மொழிகளிலும் சீதுவையில்  உள்ள பிரதான அலுவலகத்திலும் இடம் பெறவுள்ளன.

உளவளத் துனை , சிறுவர் பாதுகாப்பு, முதியோர் பராமரிப்பு, சமூகப் பராமரிப்பு போன்ற டிப்ளோமா பாடநெறிகள் பிரதான மற்றும் மாவட்டங்களில் உள்ள நிலையங்களிலும் மும்மொழிகளிலும் இடம் பெறவுள்ளதாகவும் சமூகப் பணி  , உளவளத் துனை , சிறுவர்களை மையப்படுத்திய சமுதாய அபிவிருத்தி உள்ளிட்ட ஆறு மாதங்களை கொண்ட சான்றிதழ் பாடநெறிகளும் மேலும் இடம் பெறவுள்ளன.

முதுமாணி பட்ட பாடநெறியை தொடர இளமானி பட்டமும், உயர் டிப்ளோமா பாடநெறியை தொடர குறித்த தகைமையும், டிப்ளோமா பாடநெறிகளை தொடர கா.பொ.தா. உயர் தரத்தில் சித்தியும், சான்றிதழ் பாடநெறிகளுக்காக கா.பொ.தா.சா.தர பரீட்சையில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பாடநெறிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர்கள் www.nisd.ac.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பூரணமாக நிரப்பப்பட்ட  விண்ணப்பங்களை குறித்த விண்ணப்ப கடித உறையின் இடது பக்க மூலையில் பாடநெறி மொழி மூலம் கற்கைநெறி நிலையம் என்பவற்றை தெளிவாக எழுதி 2020.02.15 திகதிக்கு முன் கிடைக்கக் கூடியவாறு பதிவாளர், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்,லியனகமுல்ல , சீதுவ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு பதிவாளர் கேட்டுள்ளார்.

 மேலதிக தகவல்களுக்கு 0112882506 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

உளவளத்துனை உள்ளிட்ட பல்வேறு பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. உளவளத்துனை உள்ளிட்ட பல்வேறு பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.