குவைத் வாழ் இலங்கையர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.


குவைத் வாழ் அனைத்து இலங்கையர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கிடையில்
இன ஐக்கியத்தையும் , நல்லுறவினையும் வலுப்படுத்துமுகமாகவும், மேலும் எதிர்வரும் இலங்கையின் 72 ஆவது  சுதந்திர தினத்தினை முன்னிட்டும்  The Society of All Sri Lankans in Kuwait (SLK ) அமைப்பு கடந்த ஜனவரி 10ம் திகதி வெள்ளி அன்று குவைத் , ஸல்மியா பிரதேசத்திலுள்ள உள்ளக விளையாட்டரங்கு ஒன்றில் கரப்பந்தாட்ட சுற்றுப்  போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.


இந்தப் போட்டியில் குவைத்தில் வசிக்கும் 130 க்கு மேற்பட்ட  இளைஞர்கள்  இன மத வேறுபாடுகளின்றி கலந்து கொண்டிருந்தனர்.

இப்போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை முறையே SLPP,  SHHK  அணியினர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இவ்வாறானதொரு கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினையும் இம்மாத இறுதியில் நடாத்த ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இவற்றிற்கான வெற்றிப்பதக்கங்கள் மற்றும் பரிசில்கள்களை வரும் பெப்ரவரி மாதம், நாட்டின் சுதந்திர தினத்தினை நினைவு கூறு முகமாக SLK யினால் பிரத்தியேகமாக  ஏற்பாடு செய்யப்பட இருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொண்ட, ஆதரவளித்த, சமூகம் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் SLK தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 The Society of All Sri Lankans in Kuwait (SLK)




குவைத் வாழ் இலங்கையர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி. குவைத் வாழ் இலங்கையர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி. Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.