அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் விபரம்..


2020.01.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:



2019 / 20 பெரும்போக அறுவடை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இம்முறை 3 மில்லியன் மெற்றிக் தொன் அளவில் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொள்கை ரீதியில் அரசாங்கத்தினால் அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்பதினால் அரிசி விலை ஓரளவிற்கு அதிகரித்திருந்த போதிலும் இதன் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு செலவாணியாக சேமிப்பதற்கு முடிந்துள்ளது. இந்த நிலை வெளிநாட்டு நாணய விகிதத்தின் ஸ்திரத்தன்மையைப் போன்று வட்டி விகிதத்தையும் குறைப்பதற்கான அழுத்தமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு அமைவாக நெல்லின் விலையில் ஸ்திரத்தன்மையை முன்னெடுத்தல் மற்றும் நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக தனியார் துறையில் அரிசி உரிமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2019 ஃ 20 பெரும்போகத்தில் மேலதிக நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கீழ் கண்ட நடவடிக்கைகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• தரத்துடன் (ஈரத்தன்மை தொடர்பான வரையறைக்கு உட்பட்டதாக) ஒரு கிலோ நெல்லுக்கு ஆக கூடிய உறுதி செய்பபட்ட விலையை நிர்ணயித்தல்.

• ஈரத்தன்மையுடனான ஒரு கிலோ நெல்லின் ஆக கூடிய விலை 45 ரூபாவாக நிர்ணயித்தல்.

• அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஃ அரசாங்க அதிபர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் மூலம் நடைமுறைப்படுத்துதல்.

• முப்படை, சிறைச்சாலை திணைக்களம், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு அரிசியின் தேவைக்காக நேரடியாக இந்த நிறுவனங்கள் மூலம் நெல்லைக் கொள்வனவு செய்தல்.

• கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான பணிகளை உணவு ஆணையாளர் கொண்டுள்ள அனைத்து களஞ்சியங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஃ அரசாங்க அதிபர்களிடம் உடனடியாக கையளித்தல்.

• நெல்லை ஏற்றிச்செல்லும் பணிகளுக்காக அரசாங்கம் கொண்டுள்ள லொறி மற்றும் ட்ரக் வாகனங்களைப் பயன்படுத்துதல்.
• உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலானதைப் போன்று பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நெல்லை கொள்வனவு செய்வோர்களுக்கு 8 சதவீத வட்டி அடிப்படையில் 100 மில்லியன் ரூபா உறுதிக் கடன் அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்குதல்.

• பிரதான அரிசி உற்பத்தி மாவட்டமான பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான பொறுப்பை சில இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைத்தல்.

மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் வேலைத்திட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சுற்றறிக்கைக்கான ஆலோசனைகளை ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடுதல்.

02. இலங்கைக்கு வருகை தரும் மற்றும் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் விசா விண்ணப்பம் இலத்திரனியல் பயண அனுமதி கட்டமைப்பு ஊடாக சமர்ப்பிப்பதற்கான அதிகாரம் பெற்ற கவர்களை நியமித்தல்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கைக்கு வருவதற்காக முழுமையான பரிசோதனையை மேற்கொள்ளுதல் மற்றும் அனுமதியை வழங்குதவற்காக இலத்திரனியல் பயண அனுமதி (Electronic Travel Authorization) (ETA). வழங்கும் முறை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை சீன சுற்றுலாப்பயணிகளின் இலங்கை சீன சுற்றுலாப்பயணிகளை பெருமளவில் கவரும் நாடான இலங்கையினால் கடைப்பிடிக்கப்படும் இலத்திரனியல் பயண அனுமதியை வழங்கும் நடைமுறை தற்பொழுது ஆங்கில மொழியில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கைக்கு வரும் அந் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு விசாவை பெற்றுக்கொள்ளும்பொழுது சில வேலை தாமதங்களை எதிர்கொள்ளவேண்டியிருப்பது தெரியவருகின்றது. இந்த நிலைமைக்கு தீர்வாக அந் நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வரும் பொழுது விசாவை பெற்றுக்கொள்வதற்காக உதவுவதற்கு தனியார் முகவர்களின் சேவையைப் பொற்றுக்கொள்வது பொருத்தமாகும் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அமைவாக பல நாடுகளில் இந்த சேவையை வழங்குவதில் அனுபவமிக்க நிறுவனம் ஒன்றான சீனாவின் செங்ஹயில் உள்ள வரையறுக்கப்பட்ட ட்ரவல்ஸ் இன்டர்நெஷனல் ட்ரவல் சேவிஸ் (செங்ஹய்) நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் உள்ளக வர்த்தகம் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் அவர்கள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புதுமை படைத்தல் அதிகார சபையை (NASTICA) ஸ்தாபித்தல்.

விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு இணைப்பு செயலக அலுவலகம் (COSTI), தேசிய விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதுமை படைத்தல் இணைப்பு அதிகாரசபை ( NASTICA) ஆக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நியமிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. சட்ட திருத்த திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட திருத்த சட்ட மூலத்தை தயாரிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. ‘நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலை நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் இலங்கை சர்வதேச புதுமை படைத்தல் மத்திய நிலையமாக மேம்படுத்தும் தொலைநோக்கு இலக்கை வெற்றியடைய செய்யும் நோக்கில் இலங்கை தயாரிப்பாளர்களின் ஆணைக்குழு பணி மற்றும் பொறுப்பும் உத்தேச தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புதுமை படைத்தல் அதிகார சபையின் விடயதானத்துக்கு உள்ளடக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஒழுங்கு விதிகள் தற்பொழுது திருத்த சட்ட மூலமாக தயாரிக்கப்பட்டு வரும் சட்டத்தில் அறிமுகப்படுத்தி அந்த திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. ஸ்ரீ ஜயவர்தனபுர, வயம்ப, ருஹுனு, கொழும்பு, சப்ரகமுவ, போராதெனிய, மொறட்டுவ மற்றும் இலங்கை பிக்குமார் போன்ற பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துதல்.

2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தினால் அதிகரிக்கும் நோக்கில், ஸ்ரீ ஜயவர்தனபுர வயம்ப, ருகுணு, கொழும்பு, சப்ரகமுவ, போராதெனிய, மொறட்டுவ மற்றும் இலங்கை பௌத்த பிக்குமார் போன்ற பல்கலைக்கழகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 13 நிர்மாண திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அடிப்படையில் 2020 – 2022 மத்திய கால வரவு செலவு கட்டமைப்புக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட பணிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கையில் உயர் கல்விக்காக வெளிநாடு மற்றும் தங்குமிட வசதியற்ற இலங்கை மாணவர்களை கவர்தல்.

அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஆரம்ப பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக வருடாந்தம் இணைத்துக்கொள்வதற்கு உத்தேச மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.5 சதவீதம் அளவில் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு சட்ட ரீதியிலான மானியம் இருந்த போதிலும் வெளிநாட்டு மாணவர்கள் சிறிய எண்ணிக்கையிலானோர் மாத்திரமே வருடாந்தம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கிளில் கல்வி தொடர்படுத்துவதற்காக பதிவு செய்வது தெரிய வந்துள்ளது. இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு இலங்கை சர்வதேச அறிவு கேந்திரமாக மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சதவீத வரையறைக்குள் கட்டணத்தை அறவிட்டு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக மேம்பாட்டு பணிகள் நடைமுறைப்படுத்துவதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களின் பிள்ளைகள் வெளிநாட்டு பணத்தில் கற்கை நெறி கட்டணத்தை செலுத்தும் அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கும், சர்வதேச பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு அமைய உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களின் கிளைகளை நாட்டில் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் முதுகலை ( Postgraduate) நிறுவனம் நடத்தப்பட்டுவரும் காணி மற்றும் கட்டத்தை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தல்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு நிறுவனம் நடத்தப்பட்டுவரும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவில் கறுவாத்தோட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பேராசிரியர் நந்ததாச கோத்தாகொட மாவத்தையில் நொறிஸ் கனெல் வீதியில் அமைந்துள்ள 0.2074 கெக்டர் காணி மற்றும் அதற்கு உட்பட்ட கட்டடம், அரசாங்கத்தின் காணி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய விடுவிப்பதற்கான ஆவணத்தின் மூலம் சட்டத்திற்கு அமைவாக மருத்துவ பீடத்திற்கு ( Postgraduate) வழங்குவதற்காக உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கை மின்சாரத்துறையில்; தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடய நடைமுறைகள்.

திட்டமிடப்பட்ட மின் அனல் திட்டத்தின் தாமதத்தின் காரணமாக நாட்டின் மின்சார கோரிக்கையை பூர்த்தி செய்வதில் தற்போது இலங்கை மின்சார சபை பாரிய சவாலை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதனால், இலங்கை மின்சக்கி பாதுகாப்பு மற்றும் தன்நிறைவுத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு தாமதம் இன்றி கீழ் கண்ட நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

1.நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் 300 x 2 மெகா வோல்ட் வலுவைக் கொண்ட மின்சார அலகை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையத்தை நிர்மாணித்தல்.

2. 300 மெகா வோல்ட் திரவ இயற்கை வாயு அனல் நிலையம் ஒன்றை (LNG) இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியா / யப்பானுடன் கூட்டு வர்த்தக ரீதியில் கெரவலப்பிட்டியில் ஸ்தாபித்தல்.

3. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள உத்தேச 300 மெகா வோல்ட் வலுவைக் கொண்ட திரவ இயற்கை எரிவாயு அனல் மின் நிலையம் (LNG) நிர்மாண பணிகளை துரிதப்படுத்துதல்.

4. இலங்கை மின்சார சபையினால் நிர்மானிக்கப்பட்டு வரும் நீர் மின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி மின்சார திட்டத்தை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துதல்.

5. சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் மூலம் சம்பந்தப்பட்ட திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துதல்.

08.இலங்கையில் சதுப்புநில சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாத்தல் மற்றும் பேண்தகு பயன்பாடு தொடர்பான தேசிய கொள்கை.

சுற்றாடல் சமநிலையை முன்னெடுத்து கரையோர வலையத்தை பாதுகாப்பதற்கு சதுப்பு நில சுற்றாடல் கட்டமைப்பு மிகவும் முக்கியமான பணியை நிறைவேற்றுகின்றது. இருப்பினும் தற்பொழுது பல்வேறு மனித செயற்பாடுகளின் காரணமாக இந்த கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையை கவனத்தில் கொண்டு சதுப்பு நில சுற்றாடல் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு பயன்பாடு தொடர்பான விசேட நிபுனர்களின் குழுவின் வழிகாட்டலில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் சதுப்பு நில சுற்றாடல் கட்டமைப்பின் பேண்தகு செயற்பாடு இடம்பெறுதலை உறுதி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. ’25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் 03 சிவில் பணி பொதிகளுக்கு ஆலோசகர் ஒருவரை பெற்றுக்கொள்ளுதல்.

25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் திட்டம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துதவற்காக 10 மில்லியன் குவைத் டினார்களை வழங்குதவற்காக அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மேற்கு, வடக்கு மற்றும் வட மேல் மாகாணங்களில் தேசிய பெருந்தெருக்கள் வலைப்பின்னலில் நிலவும் பாதிப்புக்கள் மற்றும் 8 குறுகிய பாலங்களை மீள நிர்மாணிப்பதற்குமான பணிகள் இந்த திட்டத்தின் 3 பொதிகளுக்கு உட்பட்டதாகும். இதற்கு அமைவாக ஆலோசனை பெறுகைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் இந்த திட்டத்தின் 3 பொதிகளுக்கான ஆலோசனைச் சேவை ஒப்பந்தம் M/S Al Aabdulhadi Engineering Consultance ( AEC) JV With Consultance engineers and architects Associated (Pvt) Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. களனி திஸ்ஸ 132kv Gas Insulated Switchear (GIS) விரிவுபடுத்தலின் கீழ் 145kv Double Busbar (GIS) Gas Insulated Switchear என்ற இரண்டை விநியோகித்தல் ஸ்தாபித்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் 145Kv Double Busbar (GIS) நிர்வகித்தல், பாதுகாத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் அளவிடுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.

களனி திஸ்ஸ கிறிட் உப நிலையம் 132 kv Busber உடன் உத்தேச எரிவாயு றெபய்னுடன் தொடர்பு படுத்துவதற்காக களனி திஸ்ஸ 132 kv Gas Insulated Switchear (GIS) விரிவுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 145 Kv Double Busbar (GIS) Gas Insulated Switchear என்ற இரண்டை வழங்குவதற்கும், ஸ்தாபிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் 145 Kv Double Busbar (GIS) வரை நிர்வகிப்பதற்கும், காப்புறுதி மதிப்பீடு மற்றும் அளவிடுவதற்கான ஒப்பந்தத்தின் தயாரிப்பானAsea Brown Bovari Lanka (Pvt0 Ltd என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

-அரச தகவல் திணைக்களம்
அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் விபரம்.. அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் விபரம்.. Reviewed by Madawala News on January 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.