டெங்கு நுளம்புகளை முற்றாக ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் அறிமுகம்.


டெங்கு நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கு நச்சு அற்ற சுற்றாடலுக்கு ஏற்ற முறையொன்றை
அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த டொனெட் பீட்டர் ஹெடர் எனும் பேராசிரியர் இப் புதிய முறையை தம்மிடம் அறிமுகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை வந்துள்ள பேராசிரியர் சுகாதார அமைச்சில் வைத்து சுற்றாடலுக்கு ஏற்ற  இப்புதிய டெங்கு நுளம்புகளை அழிக்கும் முறை தொடர்பில் கூறினார்.

இதற்கமைய தாவரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பச்சையம் (குளோரபில்) மூலம் டெங்கு நுளம்புகளை அழிக்க முடியுமென பேராசிரியர் தெரிவித்தார்.


டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் இரசாயன முறைகளால் நுளம்பின் குடம்பிகள் மட்டுமன்றி சுற்றாடல் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் ஏனைய மிருகங்கள் மற்றும் குழந்தைகளும் பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தாவரங்களிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பச்சையம் சூரிய ஒளி பட்டதும் இரசாயனமாக மாறி டெங்கு நுளம்பின் குடம்பிகளை முற்றாக அழிக்கின்றன. இப்பச்சையத்தை செலவின்றி சாதாரண இலைகள், பற்கள் மற்றும் வாழையிலைகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அப்பேராசிரியர் கூறினார் என்றார்.
டெங்கு நுளம்புகளை முற்றாக ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் அறிமுகம். டெங்கு நுளம்புகளை முற்றாக ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் அறிமுகம். Reviewed by Madawala News on January 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.