சர்வதேச கிக்பொக்சிங் போட்டி... பாகிஸ்தான் நாட்டு மூன்று வீரர்களை வீழ்த்தி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்ற கண்டி சித்திலெப்பை மாணவன் அப்துல் ஹக்கம்.


-இக்பால் அலி-
சர்வதேச கிக்பொக்சிங் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கண்டி  சித்திலெப்பை கல்லூரி
  மாணவன் அப்துல் ஹக்கம் வீரருக்கு மகத்தான  வவேற்பு.

பாக்கிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கண்டி  சித்திலெப்பை கல்லூரி  மாணவன் அப்துல் ஹக்கம் வீரருக்கு த பறகஹதெனிய மக்களால்  மகத்தான  வரவேற்பளிக்கப்பட்டது.


சர்வதேச கிக்பொக்சிங் குத்துச் சண்டைப் போட்டி பாக்கிஸ்தான் நாட்டில் 25 ஆம் திகதி முதல் 27 வரை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட கண்டி சித்திலெப்பை கல்லூரி மாணவன் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 80 கிலோ கிராம் இடையுள்ள குத்துச் சண்டைப் போட்டியில் மூன்று சுற்றுக்களில் பாகிஸ்தான் நாட்டு மூன்று வீரர்களை வீழ்த்தி இலங்கை நாட்டுக்கு தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


கட்டுநாயக விமான நிலையம் வந்தடைந்த வீரருக்கு தமது ஊரான பறகஹதெனிய பிரதேச மக்களால்ம மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குருநாகல் நகரில் இருந்து கண்டி குருநாகல் பிரதான வீதி ஊடாக வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மலர் மாலைகள் அணிவித்து கௌரவிக்பட்டார்.


இலங்கையில் இருந்து சென்ற 22 வீரர்களில் 13 தங்கமும் ஆறு வெண்கலமும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

பறகஹதெனிய பிரதேசத்தைச்சேர்ந்த  தஸ்லிம் தம்பதிகளின் புதல்வருமாவர். இதில் மாவத்தகம பிரதேச சபை உறுப்பின் எதிர் கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் முஆத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த ஊர்லவத்தில் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி
28-01-2020


சர்வதேச கிக்பொக்சிங் போட்டி... பாகிஸ்தான் நாட்டு மூன்று வீரர்களை வீழ்த்தி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்ற கண்டி சித்திலெப்பை மாணவன் அப்துல் ஹக்கம். சர்வதேச கிக்பொக்சிங் போட்டி... பாகிஸ்தான் நாட்டு மூன்று வீரர்களை வீழ்த்தி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்ற கண்டி  சித்திலெப்பை மாணவன் அப்துல் ஹக்கம். Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.