இலங்கையைச் சேர்ந்த ரிபாஸ் என்பவருக்கு 2022 வரை இந்தியாவில் சிறை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கையைச் சேர்ந்த ரிபாஸ் என்பவருக்கு 2022 வரை இந்தியாவில் சிறை.


இலங்கையைச் சேர்ந்தவர் 36 வயதுடைய முகமது ரிபாஸ் 2004 ஆம் ஆண்டு கொழும்புவில் இருந்து
வேலை நிமித்தமாக டுபாய் சென்றார்.

அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்து துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்தார்.

பின்னர் கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளன.

கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்தார் முகமது ரிபாஸ். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைவஸ்து கடத்தியதாக இவர் உள்ளிட்ட 4 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்த தாகவும் குற்றம் சாட்டபட்டு,

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார். இதனை அடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.

உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.

இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

derana
இலங்கையைச் சேர்ந்த ரிபாஸ் என்பவருக்கு 2022 வரை இந்தியாவில் சிறை.  இலங்கையைச் சேர்ந்த ரிபாஸ் என்பவருக்கு  2022 வரை இந்தியாவில் சிறை. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5