வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது . - Madawala News Number 1 Tamil website from Srilanka

வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது .


தற்போது வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது என்று
வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வரி வகைகள் சில குறைக்கப்பட்டிருப்பதால், அறவிடக்கூடிய வருமானம் அதிகரிப்பதனால், வாகனத்தைக் கொள்வனவு செய்வதில் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தின் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி மறுசீரமைக்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் வாகனங்களின் விலை குறைவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(அரசாங்கத் தகவல் திணைக்களம்)
வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது . வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது . Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5