வைத்தியர் முகம்மது அஜ்வாட், ஒரு மனிதநேயம்…. - Madawala News Number 1 Tamil website from Srilanka

வைத்தியர் முகம்மது அஜ்வாட், ஒரு மனிதநேயம்….சிங்களத்தில் கருணாரத்ன கமகே தமிழில் ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்..!


ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதானது சமூக தொடர்புகளை உருவாக்குகிறது. ஆகவே இக்காலகட்டத்தில் நல்லிணக்கத்திற்கான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை, ”என்கிறார் வைத்தியர் முகம்மது அஜ்வாட்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் உள்ள ஒட்டமாவடி எனும் கிராமத்தில் பிறந்த முகம்மது புஹாரி முகம்மது அஜ்வாட் மற்றும் கொனாரா முதியன்சலாகே ருக்மா மைத்ரி குமாரி,  மாமுலேவின் பமுனுவாவைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்க்கையில் தம்பதிகளாக இணைந்துகொள்வதற்கு முன்னர் ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடும், விட்டுக்கொடுப்போடும் பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டுமக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வருவதை பார்க்க கூடியதாக உள்ளது.

வைத்தியர் அஜ்வாட் கண்டி பொது மருத்துவமனையில் வார்டு மருத்துவராக பணியாற்றிபொழுது அதே வார்டில் செவிலியராக ருக்மா மைத்திரி குமாரி பணிபுரிந்தார்.  அவ்வாறு பணியாற்றுகையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதியாக காதலர்களாக மாறினர்,  அவர்களுக்கிடையில் இருந்த தீவிரமான அன்பின் விளைவாக இன்று ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வருகின்றனர்.  அஜ்வார்ட் ருக்மாவின் காதல் கதை நேற்று இன்றல்ல, முப்பது ஆண்டுகளுக்கு மேலானது. ஆனால் அதன் புத்துணர்ச்சிக்கு குறைவில்லை என்ற பார்வையே அவருடன் பழகுகின்றவர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு வைத்தியர் அஜ்வாட்டை சந்தித்து உரையாடுகையில்…"நாங்கள் திருமணம் செய்வதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் பலவிடயங்களில் ஒற்றுமையுடன் ஒருமித்த வெற்றிகளை கண்டிருந்தோம் (டேட்டிங்). எங்களுக்கிடையில் எந்த நேரத்திலும் ஒரு இன வேறுபாட்டு பிரச்சனைகள் வரவுமில்லை, சமூகத்தில் நடக்கும் அவ்வாறான பிரச்சனைகள் எங்களுக்கிடையில் எந்த வகையிலும் தாக்கங்களை செலுத்தியதுமில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும், அதனூடாகவே எங்களுடைய வாழ்கையினை நாங்கள் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம் என வைத்தியர் முகம்மது அஜ்வாட் கூறினார்.

வைத்தியர் அஜ்வர்டுடனான தனது உரையாடலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவர் பணியாற்றிய அனுபவங்களை விபரித்த பொழுது அது மிகவும் சுவாரஸ்யமகாவும் பல்லின சமூகம் வாழுகின்ற இந்த நாட்டு மக்களுக்கு தெறிவிக்க வேண்டிய சிறந்த விடயம் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

மேலும் அஜ்வாட் விபரிக்கையில் “எனது முதல் நியமனம் புத்தலத்தில் உள்ள கல்பிட்டி மாவட்ட மருத்துவமனையாகத்தான் இருந்தது. நான் அங்கு இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன்.  1986 நான் மட்டக்களப்பு ஏறாவூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கே ஒரு வருடம் வேலை செய்தேன் . அதை தொடர்ந்து மதவாச்சிய மாவட்ட மருத்துவமனைக்கு மாவட்ட மருத்துவ அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டேன்.

அங்கு எனக்கு உத்தியோகபூர்வாமாக வாழ்க்கையின் பல அனுபவங்கள் கிடைக்க கூடியதாக இருந்தன. நோயாளிகளின் மருத்துவ கவனிப்பு மட்டுமல்லாமல், மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்புகள் என பல வகையான அனுபவங்களை பெற்றேன். அந்த காலகட்டமானது எமது நாடு எதிர்கொண்ட கொடிய யுத்தத்தின் அதியுச்ச கொந்தளிப்பான காலமாக இருந்தது. மதவாச்சியானது வடக்கினுடைய எல்லையாக இருப்பதால், அனைத்து மக்களும் பாதுகாப்பு படையினரின் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுத்தப்படுபவர்களாக இருந்தார்கள். 

மருத்துவமனை ஊழியர்ள் கூட அதிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. சில நேரங்களில் அவர்களையும் பலதடவைகள் இராணுவம் தடுத்து வைத்த சம்பவங்கள் இருகின்றன.
எனவே நான் இராணுவ முகாம்களுக்கும், பொலிஸ் சோதனைச் சாவடிகளுக்கும் சென்று உண்மைகளை விளக்கி அவர்களை மீள அழைத்து வருவதுண்டு. 

அந்த நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக எங்கள் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில் அனுராதபுர பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதுண்டு. அவ்வாறான நேரத்தில் ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால்,  அவரை அனுராதபுரத்திற்கு அனுப்ப வழி இல்லாமல் போகும். சில நேரங்களில் இடை நடுவில் அம்பிலன்சிலிருந்து வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்ததுண்டு.

, குறிப்பிட்ட மதமோ அல்லது இனத்திற்கோ, குழுவிற்கோ மட்டுமே சேவை செய்ய தெரிவு செய்யப்பட்டவராக எமது கடமையினை மேற்கொண்டால், அது உன்னத மனிதகுலத்திற்கு அவமானமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார் வைத்தியர் அஜ்வாட்.

கல்பிட்டி, மதவாச்சியில் இருந்து வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டபோது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக , அந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்த விடயங்களை விபரித்தார்.  “ அவ்வாறு நான் கல்பிட்டியில் வேலை செய்து அந்த மருத்துவமனையில் இருந்து நான் இடமாற்றம் செய்யப்பட்ட வேலையில் மக்கள் மிகவும் சோகமாக தன்னிடம் காட்டிக்கொண்டதாகவும், சிலர் அழுது தங்களுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த விடயம் சம்பந்தமாக அஜ்வாட் விபரிக்கும் பொழுது ”அந்த பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்களை விடவும் என்னை நன்றாக நடத்தினார்கள். அதனால்தான் நான் என் கடமைகளைத் தாண்டி அவர்களுக்கு சேவை செய்தேன்.

1991ம் ஆண்டு நான் மாவட்ட வைத்திய அதிகாரியாக ஹிங்குராக்கொட மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். நான் வந்தபோது, பல சிக்கல்கள் அங்கே இருந்தன. நிர்வாக சிக்கல்களை முக்கியமாக குறிப்பிட முடியும். என்னால் பல விஷயங்களை சரிசெய்து மருத்துவமனையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

அக்கால கட்டத்தில் என்னால் ஒரு காரினை வாங்கிக்கொள்ள முடிந்தது. கடினமான நோயாளியை பொலன்னருவ பொது மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவோம். இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் அப்பொழுது இருந்ததில்லை. சில நேரங்களில் ஆம்புலன்ஸ் இல்லாத நிலையிலும்,  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எனது கார்தான் பொலன்னருவ வைத்தியசாலைக்கு  அம்பூலன்ஸ் வண்டியாக பயணிக்கும்.”

ஆகவே எனது பார்வையில்,  "மிகவும் பயபக்தியுடன் தனது கடமைகளை கவனித்துக்கொண்ட வைத்தியர் அஜ்வத்,   தற்பொழுது அரச சேவைக்கு விடை கொடுத்துள்ளார். அவரது அன்பு மனைவி ருக்ஸ்மா கூட. மனவி இப்போது முழுநேர இல்லத்தரசி வேலை செய்கிறார். அரச சேவையில் இல்லை என்றாலும்,  வைத்தியர் முஹம்மட் அஜ்வாட் நோயாளிகளை குணப்படுத்துவதை விட்டுவிடவில்லை".

சிறப்பு மருத்துவர்கள், வைத்திய நிருணர்கள்,  சகல வசதிகளையும் கொண்ட மருத்துவ ஆய்வு கூடம் என மருத்துவ சேவையினை வழங்க கூடிய தனியார் வைத்தியசாலையினை நாட்டினுடைய சகல மக்களுக்காகவும் பொலன்னருவ நகரில் ஒரு முழுமையான மருத்துவ மையமாகவும் நிர்மாணித்துள்ளார். அஜ்வாட், ருக்மா மற்றும் அவருடைய ஒரே மகள் காலிதா ஆகியோர்களின் நிர்வகிப்பின் கீழ் இப்போது வாழும் தலைமுறையினரின் வைத்திய தேவைகளை நிறைவு செய்ய கூடிய வகையில் குறித்த மருத்துமனை செயற்படுகின்றது. 

இறை அருளை எதிர்கொள்வதில் சமூக நன்மைக்காக நாம் அதிகம் செய்ய முடியும் என்ற யதார்த்தத்தினை வைத்தியர் அஜ்வாட்டுடன் மேற்கொண்ட உரையாடல் எனக்கு தெளிவு படுத்தியது. 

சிங்களத்தில் கருணாரத்ன கமகே தமிழில் ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

මිනිස්කම අදහන දොස්තර මොහමඩ් අජ්වාඩ්

"එකිනෙකා තේරුම් ගැනීම තුළ සමාජ සම්බන්‍ධතා ඇති වෙනවා. එතකොට සංහිඳියාව කියලා අමුතුවෙන් දෙයක් ඇති කරන්න අවශ්‍ය නොවේවි කියලයි මං හිතන්නේ" යැයි වෛද්‍ය මොහමඩ් බුහාරී මොහමඩ් අජ්වාඩ් කියයි.

මඩකළපුව දිස්තික්කයට අයත් වාලච්චේන, ඕටමාවඩි ගම්මානයේ උපත ලද මොහමඩ් බුහාරී මොහමඩ් අජ්වාඩ් සහ මාතලේ පමුණුව ගමේ උපන් කෝනාර මුදියන්සේලාගේ රුක්මා මෛත්‍රී කුමාරී පමුණුව එකිනෙකා දැන හැඳින ගන්නේ සිය ඔවුන්ගේ රාජකාරී ජීවිතයේ එක්තරා සන්ධිස්ථානයකදීය. ඒ මහනුවර මහ රෝහලේ වාට්ටු භාර වෛද්‍යවරයා ලෙස වෛද්‍ය අජ්වාඩ් කටයුතු කරද්දීය. එම වාට්ටුවේම හෙදියක ලෙස රුක්මා එවකට සේවය කළාය. ඔවුන් කලකදී පෙම්වතුන් බවට පත්ව පසුව ඒ මුහුකුරා ගිය ප්‍රේමයේ ප්‍රතිඵලයක් ලෙසින් යුගදිවියට එළඹෙන්නේ වසර පහකට පමණ පසුවය. අජ්වාඩ් රුක්මා ප්‍රේම කතාව අද ඊයේ නොව වසර තිහකට වඩා ඈතට දිවෙන්නකි. එහෙත් එහි නැවුම් බව නොඅඩුය.

"අපි දෙන්නා විවාහ වෙන්න කලින් අවුරුදු පහක් ආශ්‍රය කළා පෙම්වතුන් විදියට. අපිට ජනවර්ගය ප්‍රශ්නයක් වුණේ නෑ කිසිම වෙලාවක. එකිනෙකා තේරුම් ගැනීම පමණයි අවශ්‍ය වෙන්නේ. අන්‍යොන්‍ය අවබෝධය පමණයි අවශ්‍ය. ජන වර්ගය කුමක් වුවත් ඒක ප්‍රශ්නයක් කරගත යුතු නෑ." වෛද්‍ය මොහමඩ් අජ්වාඩ් කියයි.

වෛද්‍ය අජ්වාඩ් දිවයිනේ විවිධ ප්‍රදේශවල රජයේ රෝහල්වල සේවය කිරීමෙන් ලබා තිබෙන අත්දැකීම් සමුදාය ඉතා විශාල බැව් ඔහු සමඟ කළ කථා බහේදී පැහැදිලි විය.

"මට මුල්ම පත්වීම ලැබුණේ පුත්තලම කල්පිටිය දිසා රෝහලට. අවුරුදු දෙකක් එහේ රාජකාරි කළා. 1986 මඩකළපුව එරාවූර් පර්යන්ත රෝහලට මාරුවීමක් ලැබුණා. එතැන එක අවුරුද්දයි රාජකාරි කළේ. ඊට පසුව මැදවච්චිය දිසා රෝහලට ඩී.එම්.ඕ. (දිස්ත්‍රික් වෛද්‍ය නිලධාරි) හැටියට වැඩ බාර ගන්න ලැබුණා. එහිදී රාජකාරී ජීවිතයේ අත්දැකීම් රාශියක් ලැබුවා. වෛද්‍යවරයකු හැටියට රෝගීන්ට ප්‍රතිකාර කිරීම පමණක් නොවෙයි රෝහලේ පරිපාලනය සම්බන්‍ධයෙනුත් පැවැරී තිබුණු වගකීම් ආදියත් නිසා. එතකොට රටේ කලබල ගොඩක් උත්සන්න වෙලා පැවැති අවදියක්. මැදවච්චිය උතුරු පළාතට මායිම්ව තිබීම නිසා සියලුදෙනාම ඒ කාලේ ආරක්ෂක අංශවල දැඩි පරීක්‍ෂාවට ලක්වෙනවා. රෝහලේ කාර්යමණ්ඩලයට කියලා කිසි වෙනසක් නෑ. ඇතැම් වෙලාවට ඒ අය රඳවගන්න අවස්ථාත් තිබෙනවා. ඉතින් මට සිද්ධ වෙනවා හමුදා කඳවුරුවලට, පොලිස් මුරපොළවලට ගිහිල්ලා කරුණු පැහැදිලි කරලා ඒඅය නැවත මුදාගෙන එන්න. ඒ වගේම ඒ කාලේ රටේ පැවති කලබලකාරී තත්වය නිසා අපේ රෝහලේ තිබෙන ගිලන් රථය රාත්‍රියට අනුරාධපුර මහ රෝහලට ගෙන්න ගන්නවා. හදිසියේ රෑට ලෙඩෙකුට අසාධ්‍ය වුණොත් අනුරාධපුරයට යවන්න විදියක් නෑ. ඒ නිසා මට සිද්ධ වුණා රෑට අමාරුවෙයි කියලා සැක හිතෙන ලෙඩ්ඩු හවස අනුරාධපුරයට යන ඇම්බියුලන්ස් එකේ දාලා යවන්න."

විවිධ භාෂා කතා කරන විවිධ ආගම් අදහන ජනයාගෙන් සමන්විත සමාජයේ එක් පිරිසකට පමණක් සේවය කිරීමේ පිළිවෙතක් තමන් තෝරා ගත්තේ නම් එය උතුම් මිනිස් කමට නිගා දෙන්නක් බව වෛද්‍ය අජ්වාඩ් පෙන්වා දෙයි. කල්පිටිය, මැදවච්චිය වැනි රෝහල්වල සේවය කර ස්ථාන මාරුවීම් ලබා පැමිණි අවස්ථාවලදී ඒ ප්‍රදේශවල ජනතාව හඬාවැටෙමින් දුක් වූ අයුරු සිය අතීත මතකය අවදි කරමින් ඔහු පවසන්නේ ඉතාමත් හැඟීම්බරවය.

"කල්පිටිය ඉස්පිරිතාලෙන් මාරුවෙලා එන දවසේ මිනිස්සු ගොඩක් දුක් වුණා. සමහරු ඇඬුවා. මැදවච්වියේ ඉස්පිරිතාලෙත් එහෙමයි. ඒ පළාත්වල මිනිස්සු මට සැලකුවේ තමුන්ගේ නෑදෑයෙකුටත් වඩා ඉහළින්. මමත් මගේ රාජකාරී සීමාවෙන් ඔබ්බට ගිහින් ඒ අයට සේවය කළා ඒ නිසයි ඒ ජනතාව මට ඒ විදියට කෘතගුණ දක්වන්න පෙලඹුණේ කියල මට හිතෙන්නේ. මැදවච්චිය ඉස්පිරිතලෙන් මාරුවිම් ලැබිලා ඊළඟට මට එන්න ලැබුණේ හිඟුරක්ගොඩ දිසා රෝහලට, ඩී.එම්.ඕ හැටියට. මං එනකොට එතන ප්‍රශ්න ගොඩක් තිබුණා. පරිපාලනමය ගැටලු. බොහෝ දේවල් නිරාකරණය කරලා හොඳ මට්ටමකට රෝහල ගේන්න මට පුළුවන්කම ලැබණා. ඒ කාලය වෙද්දි මට කාර් එකක් ගන්න පුළුවන් වුණා. අමාරු ලෙඩෙක්ව ගෙනියන්න තියෙන්නේ පොළොන්නරු මහ රෝහලට. දැන් කාලේ වගේ පහසුකම් තිබුණේ නෑ. සමහර දවසට ඇම්බියුලන්ස් එක නැති වෙලාවක ලෙඩෙකුට අමාරු වුණොත් මගේ කාර් එකෙන් පොළොන්නරුව මහ රෝහලට අරගෙන එනවා." රාජකාරිය දේව කාරියකටත් වඩා ඉහළින් ඉටු කිරීමට වග බලාගත් වෛද්‍ය අජ්වාඩ් මේ වන විට රාජ්‍ය සේවයට ආයුබෝවන් කියා තිබේ. ඔහුගේ ප්‍රිය බිරිය රුක්මාද එලෙසමය. ඇය දැන් පූර්ණකාලීනව ගෘහණියක ලෙස කටයුතු කරයි. දැන් රාජ්‍ය සේවයේ නැතත් වෛද්‍ය අජ්වාඩ් ලෙඩුන් සුවපත් කිරීම අත්හැර නැත. විශේෂඥ වෛද්‍යවරුන් ඇතුළුව තවත් බොහෝ වෛද්‍යවරුන්ගේ සේවය සහ අතුරු වෛද්‍ය සේවාවන් මහජනතාවට ලබා ගතහැකි අංග සම්පූර්ණ වෛද්‍ය මධ්‍යස්ථානයක් පොළොන්නරුව නගරයේ නිර්මාණය කර තිබේ. අජ්වාඩ්, රුක්මා යුවළගේ එකම දියණිය කලීඩා සිය පිය මග යමින් ජීවක පරපුරේ මතු මෙහෙවර සඳහා මේ වන විට අතපොත් තබා සිටින්නීය.

මානව දයාව පෙරදැරිව සමාජ යහපත උදෙසා බොහෝ දේ කළ හැකි බව වෛද්‍ය අජ්වාඩ් අපට උගන්වන පාඩමයි.

[කරුණාරත්න ගමගේ]
வைத்தியர் முகம்மது அஜ்வாட், ஒரு மனிதநேயம்…. வைத்தியர் முகம்மது அஜ்வாட், ஒரு மனிதநேயம்…. Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5