"தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே கிடைத்த தகவலை குறிப்பிட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை"


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையிலான உறுப்பினர்களே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர், தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே கிடைத்த தகவலை குறிப்பிட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தகவலை மறைப்பதற்காக ஒரு சில அதிகாரிகள் போலி ஆவணங்களை தயாரித்தார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி அதன்மூலம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது பாதுகாப்பு சபை கூட்டம் தவறாமல் இடம்பெற்றதாகவும் அதற்கமைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஏதேனும் தகவல் கிடைத்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தளர்வான போக்கை கடைப்பிடித்தாகவும் அதனால் தேசிய புலனாய்வு துறை வீழ்ச்சியடைந்தாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பயனாக இஸ்லாமிய பிரிவினைவாதத்தை தடுக்க முடியாமல் போனதாகவும் கருத்து தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
"தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே கிடைத்த தகவலை குறிப்பிட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை" "தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே கிடைத்த தகவலை குறிப்பிட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை" Reviewed by Madawala News on December 03, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.