சந்தி சிரிக்கின்ற சட்டவாட்சி !



இன்னும் சில நாட்களில் அலறி மாளிகையிலிருந்து ஃபெயார் வெல் பெறக் காத்திருக்கின்ற
நம்ம நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு என்ன ஒரேயடியாக என்னாச்சு   என்று யோசிக்கின்ற அளவுக்கு இருக்கின்றது அவரது சிரிசேனத்தனமான செயற்பாடுகள். 

சட்டவாட்சியை சாக்கடையாக்கி அதனை புத்தளம் அருவாக்காட்டுக்கு அனுப்பி வைக்கின்ற அவரது அயோக்கியத்தனம் ஹை டெஸிபலில் அலற வைக்கின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (Contempt of Court) பதினெட்டு வருட காலம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளித்து சட்டவாட்சியை கதறக் கதற பாலியல் வன்புறவு செய்த சிரிசேன இப்போது கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டணை அளிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பென்ற ஒன்றை வழங்கி பொறம்போக்குத்தனம் செய்து அதுக்கும் மேலே என்று தம்ஸ் அப் காட்டியிருப்பது இலங்கையின் சட்டவாட்சி மற்றும் நீதித்துறை என்பவற்றை காமடி பீசாக மாற்றியிருக்கின்றது. 

கடந்த 2005-07-01ம் திகதி கொழும்பு ரோயல் பார்க்கில் வைத்து குரூரமாக கொலை செய்யப்பட்ட யுவோன்னே ஜோன்சன் எனும் வெளிநாட்டுப்பெண்ணை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட டொன் சமந்த ஜூட் அன்டணி ஜயமஹ என்பவருக்கெதிராக கொழும்பு மேனீதிமன்றத்தில் (High Court of Colombo) வழக்கு விளக்கம் நடைபெற்றது. நடந்து முடிந்த வழக்கு விளக்கத்தில் அவர் கொலை செய்ததற்காக இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு-296ன் கீழ் குற்றவாளியாக்கப்படாமல் மாற்றமாக இலங்கை தண்டணைச் சட்டக்                                                                                                         கோவையின் பிரிவு-297ன் கீழ் ஆட் கொலைக்கு (Convicted for culpable homicide not amounting to murder) குற்றவாளியாக்கப்பட்டார். 

அதன் படி அவருக்கு கொழும்பு மேனீதிமன்றம் பன்னிரெண்டு வருட கால கடூழிய சிறைத் தண்டனை (12 years rigorous imprisonment) விதித்திருந்தது.  குற்றவாளி ஆட் கொலை செய்யவில்லை படு கொலையே செய்தார் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என்பதன்  அடிப்படையில் சட்ட மா அதிபர் கொழும் மேனீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் தண்டனைக்கெதிராக கொழும்பு மேனீதிமன்றத்துக்கு (Court of Appeal) மேன் முறையீடு செய்தார். பொதுவாக குற்றவியல் வழக்குகளில் முதன்மை நீதிமன்றங்களில் (Courts of First Instances) குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டர்களே அந்தத் தீர்ப்புக்கெதிராக மேன் முறையீடு செய்வது வழக்கம். ஒரு சில விதிவிலக்கான வழக்குகளில் மாத்திரம் சட்ட மா அதிபர் வழங்கப்பட்ட தீர்ப்பு பிழையென்றும் வழங்கப்பட்ட தண்டனை போதாதென்றும் மேன் முறையீடு செய்வார்கள். 

அந்த மாதிரியான அரிதான மோடில் வருகின்ற வழக்குகளில் இதுவும் ஒன்று. சட்ட மா அதிபரினால் கொழும்பு மேனிதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும்; தண்டனைக்கெதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மேன் முறையீடு செய்யப்பட்ட போது மேன் முறையீட்டு நீதிமன்றம் மேல் நிதிமன்றத்தின் தீர்பபையும் தண்டனையையும் மாற்றி எழுதியது. அதன்படி குற்றவாளி படு கொலை செய்தாரென்று தீர்ப்பளித்த அவருக்கு இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு-296ன் கீழ் மரண தண்டனை விதித்தது. 

இந்த வழக்கில் இன்னுமோர் ஸ்பெஷாலிட்டி மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பக்கெதிராக குற்றவாளி உச்ச நீதிமன்றத்துக்கு (Supreme Court) மேன் முறையீடு செய்வதற்கான விஷேட அனுமதி கேட்டு (Special Leave to Appeal) செய்த விண்ண்ப்பத்தினை சுப்ரீம் கோர்ட் உடனடியாகவே நிராகரித்திருந்தது. அந்தளவுக்கு குற்றவாளிக்கெதிராக “கொலையை வேறு யாரும் செய்யவில்லை அவர்தான் கொலையைச் செய்தார்” என்று நூறு வீதம் நம்புவதற்கான அத்தனை சூழ்நிலைச்சான்றுகளும் (Incriminating Circumstantial Evidence) அத்தனை சாமுத்திரிகா லட்சணங்களோடும் இருந்தது. 

இந்த வழக்கானது வழக்கு நடந்த எல்லா நீதிமன்றங்களிலும் குற்றவாளிக்கெதிரான கொலைக்குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்துக்கப்பால் (Beyond the reasonable doubt) நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. மேன் முறையீட்டில் அது மேலதிகமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் வழக்குத் தொடுனர் சார்பாக வழக்கை நடாத்தியது இன்றைய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரும், அப்போதைய மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுமான ஜெயந்த ஜெயசூரிய (பீசீ) என்பது மேலதிக தகவல். 

2005களில் இலங்கை மக்களின் பரவலான கவனத்தை ஈர்த்திருந்த இந்த கொலை வழக்கானது அந்தக் காலபப்குதயில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது டெயிலி சல சலப்பில் ஹை டெஸிபல் கட்டிக்கொண்டிருந்தது. கொலை செய்ததாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டு சிறை சென்று பத்து வருடஷங்கள் கூட சரியாக கழியவில்லை…அதற்குள்ளாக ஒரு கோல்ட் பள்டட் மேர்டரரை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பென்ற பெயரில் வெளியே கொண்டு வந்திருக்கின்றார் சிரிசேன. 

நான் மேலே சொன்னது போல இலங்கையின் பொலிஸ் துறை நீதிமன்றங்கள் சட்ட மா அதிபர்; திணைக்களம் சட்டவாட்சி என எல்லாவற்றின் மண்டையிலும் சுத்தியலால் அடித்து அவற்றின் கபாலத்தை நொறுக்கியிருக்கின்றார் இந்த கிறிஸ்தோப ராட்சசர். இன்று சின்னச் சின்ன குற்றங்களுக்காக குற்றவாளியாக்கப்பட்டு சிறை சென்ற விளிம்பு நிலை மனிதர்களும், அது போல தண்டப் பணம் கட்ட முடியாத ஒரே காரணத்துக்காக இன் டிஃபோல்ட் சிறைவாசம் அனுபவிக்கின்ற அதி விளிம்பு நிலை மனிதர்களும் அதனின்றும் வெளியே வர முடியாமல் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அதே நேரம் கருணையே இல்லாமல் ஒரு படுகொலையை புரிந்து விட்டு இலங்கையிலிருக்கின்ற மேனீதிமன்றம்  மேன் முறையீட்டு நீதிமன்றங்களால் தீதிர்ப்பளிக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டால் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்ட ஒரு குரூரன் ஜனாதிபதியின் கையைப் பிடித்துக் கொண்டு கூலாக வெளியே வருகின்றான். 

மைத்ரிபால சிரிசேன வரலாற்றில் மிகப் பெரும் கறையை தன் மீது பூசியிருக்கின்றார். இலங்கையின் நீதித்துறை வரலாறு இருக்கின்ற காலமெல்லாம் ஒரு அசிங்கமான பக்கத்தை தனக்காக அவர் நிரந்தரமாக பட்டா போட்டு எழுதி வைத்துள்ளார். ஜனநாயகத்தின் கடைசிக்கட்ட ட்ரம்ப் கார்டாக மகா ஜனங்கள் நம்பிக் கொண்டிருக்கின்ற நீதித்துறையை மங்காத்தா ஆடி முடித்திருக்கின்றார். இது இந்த நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்பட்ட அசிங்கம். 

இன்று தம்மை நூறு வீத ஜனநாயக நாடுகளென்றும் மனித உரிமைகளின் பொடி கார்டுகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்ற மேற்கத்தைய நாடுகளில் கூட இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு என்கின்ற கூத்து இன்று வரை நடைபெறவில்லை என்பது மேலதிக தகவல். மைத்ரிபால தனது பொது மன்னிப்பு கூத்து மூலம் எதிரவருகின்ற சந்ததிகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணத்தை (Bad Precdent) விட்டுச் செல்லுகின்றார், 

கொலைகளைக் கூட விரும்பிய படி ஐ விட்னஸ்களை அருகிலே வைத்துக் கொண்டே செய்து முடிக்கலாம். வெளியே கொண்டு வரத்தான் நம்ம நாட்டு ஜனாதிபதி இருக்காரே என்ற நம்பிக்கையை கொடுத்து விட்டு நாய் சேகராக சென்றிருக்கின்றார் நம்ம ஜனாதிபதி.       

கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-11-10
சந்தி சிரிக்கின்ற சட்டவாட்சி ! சந்தி சிரிக்கின்ற சட்டவாட்சி ! Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.