விபத்தில் படுகாயம் அடைந்த ஜிஹாத் ஆசிரியரின் பூரண சுகத்திற்காகப் பிரார்த்திப்போம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

விபத்தில் படுகாயம் அடைந்த ஜிஹாத் ஆசிரியரின் பூரண சுகத்திற்காகப் பிரார்த்திப்போம்.சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் அதிக நேரத்தை செலவிடும் 
சிலரில் ஒருவர்தான் மூதூர் ஜிஹாத் ஆசிரியர் ஆவார்.


கடந்த மாதம் 28ஆம் திகதி தனது மகளின் வைத்திய தேவைக்காக மூதூரிலிருந்து அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மிஹிந்தலை பகுதியில் இவர் பயணித்த சிறியரக வேன்,

  ஜீப் வண்டியொன்றினால் மோதுண்டு  விபத்தில் சிக்கியிருந்தது.


அப்பாரிய விபத்தில் வேன் சாரதியும் தனது மூத்த சகோதரியும் மரணமான நிலையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு படுகாயமடைந்து  அநுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். நாளை திங்கட் கிழமை(11) அவரது  கை மற்றும் காலில் ஏற்பட்டுள்ள பாரிய முறிவுகளை சீர் செய்யும் நோக்கில் சத்திர சிகிச்சையை எதிர் நோக்கியுள்ளார்.ஒரு நேயமிக்க ஆசிரியர் என்பதற்கப்பால் சமூக செயற்பாட்டாளர், மனித உரிமை ஆர்வலர், ஊடக பங்களிப்பாளர் என பன்முக ஆளுமையைக் கொண்ட ஜிஹாத் ஆசிரியரும் மற்றும்  அவரின் மனைவி பிள்ளைகளும் பூரண சுகம் பெற்று வீடு திரும்புவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹுவைப்  பிரார்த்திப்போம்.

மூதூர் முறாசில்

விபத்தில் படுகாயம் அடைந்த ஜிஹாத் ஆசிரியரின் பூரண சுகத்திற்காகப் பிரார்த்திப்போம். விபத்தில் படுகாயம் அடைந்த  ஜிஹாத் ஆசிரியரின்  பூரண சுகத்திற்காகப் பிரார்த்திப்போம். Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5