ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்துவித பிரச்சார நடவடிக்கைகளும், இன்று (13) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.


ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும்,  இன்று (13) நள்ளிரவு 12 மணியுடன்
  நிறைவடையுமெனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அதற்குப் பின்னர் வேட்பாளர்களை மேம்படுத்தும் வகையிலான பிரசாரங்களை சமூக வலைத்தளங்களின் ஊடாகவேனும் முன்னெடுக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

அதற்குப் பின்னரான மௌன காலத்தில், இலத்திரனியல், அச்சு ஊடகங்களின் ஊடாக, பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுமாயின், அந்த ஊடகங்களுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேபோல, தேர்தல் விதிகளை மீறுகின்ற சமூக ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு நேரடியான இயலுமை இல்லையென அறிவித்துள்ள ஆணைக்குழு, எனினும், எழுத்துமூலமான சாட்சிகள் கிடைக்குமாயின், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்துவித பிரச்சார நடவடிக்கைகளும், இன்று (13) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்துவித பிரச்சார நடவடிக்கைகளும், இன்று (13) நள்ளிரவு 12 மணியுடன்  நிறைவடைகிறது. Reviewed by Madawala News on November 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.