தமக்கும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வேண்டும் என கோரி இன்று நால்வர் கூரை மீது ஏறி போராட்டம்.


மரணத் தண்டனை கைதியொருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு  வழங்கி விடுதலை
செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தமக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வேண்டும் என   இரண்டு சிறைக் கைதிகள் முன்னெடுத்த போராட்டம் மூன்றாவது  நாளாக இன்று (13) தொடர்கின்ற நிலையில் தற்போது இந்த ஆர்பாட்டத்தில் மேலும் இருவர் இணைந்து  மரணத் தண்டனை கைதிகள் நால்வராகி உள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறி குறித்த கைதிகள்  நேற்று முன்தினம்  (11) போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

2005ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் வசித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோயல் பாக் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியது போல் தமக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

தமக்கும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வேண்டும் என கோரி இன்று நால்வர் கூரை மீது ஏறி போராட்டம். தமக்கும்  ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வேண்டும் என  கோரி இன்று நால்வர்  கூரை மீது ஏறி போராட்டம். Reviewed by Madawala News on November 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.