மாவட்ட ரீதியில் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்ட மடவளை பஸார் கல்வீட்டு “Bright Kids” தாய்மார் சங்கம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

மாவட்ட ரீதியில் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்ட மடவளை பஸார் கல்வீட்டு “Bright Kids” தாய்மார் சங்கம்.


மடவளை பஸார் கல்வீட்டை சேர்ந்த “Bright Kids” என்னும் தாய்மார் சங்கம் ஒன்று கடந்த வருடம்
(2018) October மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.


இதுவரை அத்தாய்மார் சங்கத்தினால் பிள்ளைகளதும் தாய்மார்களதும் சுகாதார வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 அவற்றில் வீட்டுத்தோட்டம், விழிப்புனர்வு நிகழ்ச்சிகள், செல்லங்கெதெற, குழந்தை அறைகளின் சுவர் அலங்காரம், இலவச வைத்திய முகாம், மேலும் தாய்மாரகளுக்கான உடற்பயிற்ச்சி என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும்.               


            இச்சங்கமானது இவ்வருடம் September மாதம் 19 ஆம் திகதி மாவட்ட
ரீதியில் பிரதேச வாரியாக தெரிவு செய்யப்பட்ட 25 தாய்மார் சங்கங்களுக்கிடையில் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்டு (Bright Kids) தாய்மார் சங்கம் முதலிடம் பெற்றுள்ளமை எமது ஊருக்கு கிடைத்த வெற்றி ஆகும்.           


மேலும் இச்சங்கமானது எதிர்வரும் November 07 ஆம் திகதி அகில இலங்கை ரீதியிலான தாய்மார் சங்கங்களுக்கு இடையிலான போட்டியில் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.                         


             கண்டி சுகாதார அதிகாரி, MOH வைத்திய அதிகாரி, PHI அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர்  அபூ  மற்றும்  பிராந்திய SPM மருத்துவ தாதி ஆகியோர் முன்னிலையில் 20/10/2019 ஞாயிற்றுக்கிழமை (Bright Kids)தாய்மார் சங்கத்திற்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மாவட்ட ரீதியில் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்ட மடவளை பஸார் கல்வீட்டு “Bright Kids” தாய்மார் சங்கம். மாவட்ட ரீதியில் சிறந்த சங்கமாக தெரிவு செய்யப்பட்ட மடவளை பஸார் கல்வீட்டு  “Bright Kids” தாய்மார் சங்கம். Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5