மற்றவர்களுக்கு சேறு பூசி பிழைப்பு நடத்தும் ஒரு அசிங்கமான செயற்பாடு தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீதான முறைப்பாடு.



இக்பால அலி
மூவர்  இணைந்து ஆறு பேர்களை அழைத்துச் சென்று பழைய 
புகைப்படங்களைக் காட்டி அமைச்சர் ரவூப் ஹக்கீமை கைது செய்ய வேண்டும் என்று பொலிஸில்  முறைப்பாட்டை முன் வைத்திருக்கின்றனர்.


 இதன் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாதுள்ளது. 


இது சுயலநலத்துக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுத்து மற்றவர்களுக்கு சேறு பூசி பிழைப்பு நடத்தும் ஒரு அசிங்கமான செயற்பாடாகும் என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.


ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்...


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 
2010 காலப் பகுதியில் அமைச்சர் ஹக்கீமுடன் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் அல்லது  சஹ்ரானுடன் சேர்த்து ஹக்கீமை வைத்து திரிவு படுத்தப்பட்ட புகைப்படமாக இருக்கலாம். 


இதன் உண்மையை நிலை அறிந்து கொள்ள முடியாதுள்ளது. எவ்வாறாயினும் இந்த முறைப்பாடு விகாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் மஹிந்த ராஜபக்ஷவினால் பயன்படுத்தக் கூடிய ஒருவர். தன்னுடைய சுயலாபத்துக்காக மற்றவர்களுக்கு சேறு பூசி பிழைப்பு நடத்த முற்பட்டுள்ளார். 



சம காலப் பிரச்சினையின் போது பெரு எண்ணிக்கையிலான மக்களை வெளியே விடுதலை செய்வதற்கு அதிக பங்காற்றிவன் நான். 


அது தொடர்பாக நான் பெரியளவில் ஊடகங்களை வைத்து பெருமை பாராட்ட வில்லை. ஆனாலும் வெட்கமாக இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தில் பணத்துக்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று நாங்கள் வெட்கப்படுகின்றோம்.  



அவரச காலச் சட்டம் இல்லாமற் செய்யபட்ட கால கட்டத்தில்   உயர் பாதுகாப்பு வலயத்தில் தம் மனைவி சகிதம்  முகத்திரையை மூடிக் கொண்டு கோல் பேஷ் வந்துள்ளேன் என்று சமூக வலைத்;தளங்களில் ஒரு பிரச்சார முன்னெடுப்பைச் செய்தவர். 



அவர் இந்த இடத்துக்கு ஏனைய சகோதரிகளை முகத்திரை அணிந்து வருமாறு அழைப்பு விடுத்து  அவர்களுடைய முகத்திரையை யார் சரி அகற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து அதில் ஏற்படும் பிரச்சினைளில் சந்தோசம் காண்பதற்காக காத்திருந்தார். ஆனால் அவர்  அதன்  எந்தப் பயனையும் அடைந்து கொள்ள முடிய வில்லை. 



ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் நின்று  ஒரு பத்தாயிரம் வாக்குகளை இல்லாமற் செய்யுங்கள். பின்னர் தங்களை இணைத்துக் கொள்கின்றேன் என்று மஹிந்தவின்  கூற்றுக்கு இணங்க அதே போன்று தான் அந்த நபருடன் இன்னும் இருவர் தங்களுடைய வங்குரோத்து நிலையை சீர் செய்து கொள்வதற்காக சேர்ந்து கொண்டனர். 



இந்த சதித் திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவினால் வழங்கப்பட்ட வேலைத் திட்டமாகும். தின்ன வழியில்லாமல் இருப்பவர்களுக்கு திட்டமிட்ட சூழ்ச்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட வேலைத் திட்டம். இதில் சம்பந்தபட்டவருக்கு பல தரப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் உள்ளன. தி;ன்ன வழியில்லா விட்டாலும் தன்னுடைய சமூகத்தைக் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்த வேண்டாம் என அவர்களிடம் நாம்  எம்முடைய  அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார். 


விஜயதாச ராஜபக்ஷ எப்போதே ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்வர். அவர் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியில் தான் இருக்கிறார். அவர் எந்தப் பக்கம் இருக்கிறார் என்பது அப்பட்டமான வெளிப்படையான நாடே அறிந்த செய்தி. 


ஆனால் அவர் இன்றைக்குத் தான் மொட்டுக் கட்சியில்  இணைந்துள்ளதாகக் காட்டுகின்றார்கள். இதுதான் இன்றுள்ள அரசியலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இக்பால் அலி
1910-2019

மற்றவர்களுக்கு சேறு பூசி பிழைப்பு நடத்தும் ஒரு அசிங்கமான செயற்பாடு தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீதான முறைப்பாடு. மற்றவர்களுக்கு சேறு பூசி பிழைப்பு நடத்தும் ஒரு அசிங்கமான செயற்பாடு தான் அமைச்சர்  ரவூப் ஹக்கீம் மீதான முறைப்பாடு. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.