வீட்டுக்குள் நுழைந்து மற்றவர்களை கட்டிவைத்து விட்டு ஆசிரியை மீது கூட்டு பாலியல் வல்லுறவு. #இலங்கை


இராணுவத்தினர் அணியும் உடைக்கு ஒப்­பான உடை அணிந்து முகத்தை
 மூடிக் கொண்டு ஆசிரியை ஒருவரின் வீட்டினுள் நுழைந்து இரண்டு பிள்ளைகளின் தாயான அப்பெண்ணை கூட்டு வல்லுறவுக்கு உட்ப­டுத்திய பின்னர் அங்கிருந்து 2,43,000 ரூபா பெறுமதியான உடைமைகளைக் கொள்ளை­யிட்டுத் தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்­ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்­தனர்.



நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்­வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவ­ராவார்.



கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 46 வய­துடைய குறித்த பெண்ணின் வீட்டில் அப்­பெண்ணின் மகன் மற்றும் உறவினர் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டைத் திறந்து உட்சென்ற இருவர் சத்தம் போட்டால் சுட்டுக் கொலை செய்து விடுவோம் என அங்­கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.



இதனால் அச்சமடைந்த அவ்வீட்டிலிருந்த மூவரும் மௌனமடைந்துள்ளதோடு கொள்­ளையர்கள் அங்கிருந்தவர்களில் ஒருவரைக் கட்­டிலில் கட்டி வைத்துவிட்டும் அப்பெண்ணின் மகனை மற்றொரு அறையில் அடைத்து வைத்து விட்டும் குறித்த ஆசிரியையின் கழுத்தில் கத்திவை வைத்து அச்சுறுத்தி அப்­பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்­தனர்.


அதன் பின்னர் அந்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளுடன் அவர் அணிந்திருந்த ஒரு சோடி காதணி மற்றும் அங்கு தங்கியிருந்த மற்றொ­ருவர் அணிந்திருந்த 11, 500 ரூபா பெறுமதி­யான தங்கச் சங்கிலியையும் கொள்ளை­யிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.



இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் 35 — 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்­களுள் ஒருவர் இராணுவத்தினர் அணியும் ஆடையை ஒத்த டீ சேர்ட் அணிந்திருந்ததா­கவும் அவர்கள் வீட்டினுள் வரும் போது தங்கள் முகத்தை துணியினால் கட்டி மறைத்திருந்த­தாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய துரித விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

Metro
வீட்டுக்குள் நுழைந்து மற்றவர்களை கட்டிவைத்து விட்டு ஆசிரியை மீது கூட்டு பாலியல் வல்லுறவு. #இலங்கை வீட்டுக்குள் நுழைந்து மற்றவர்களை கட்டிவைத்து விட்டு ஆசிரியை மீது கூட்டு பாலியல் வல்லுறவு. #இலங்கை   Reviewed by Madawala News on October 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.