ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் .


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் 
தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார்.


இதன்போது, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் தொடர்பில் பிரதமர் கருத்து தெரிவித்தார்.


நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையா இல்லையா என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளும் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.


இந்த பிரச்சினை தொடர்பில் ஒரு திறந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடாமல் இருக்க முடியாது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் .  ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் . Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5