அவதானம் : லொறி டயரில் சிக்கி குழந்தை மரணம். வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற சோகம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அவதானம் : லொறி டயரில் சிக்கி குழந்தை மரணம். வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற சோகம்.


வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி சில்லுக்குள் 
சிக்கி, 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது என, வீரகெடிய பொலிஸார் தெரிவித்தனர்.


லொறியின் சாரதி, லொறியை முன்னோக்கி நகர்த்தியபோதே, பின் சில்லுக்குள் சிக்கி, குழுந்தை படுகாயமடைந்துள்ளது. 


குழந்தை, வீரகெடிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்படும் வழியிலேயே, உயிரிழந்துவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில், லொறியின் சாரதியாக கடமையாற்றி குழந்தையின் தந்தை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதானம் : லொறி டயரில் சிக்கி குழந்தை மரணம். வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற சோகம். அவதானம் : லொறி டயரில் சிக்கி குழந்தை மரணம். வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற சோகம். Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5