ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இறுதி
உடன்பாடு எட்டப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  

கண்டியில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கும் எனக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. கபீரும் நானும் மிகவும் நல்ல நண்பர்கள். கருத்துப் பரிமாற்றம் இருந்தது. எங்கள் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் கருத்து சுதந்திரமுள்ளது.  

அதேபோன்று ஐ.தே.கவுக்குள்ளும் பிரிவுகளும் பிளவுகளும் இல்லை. சஜித் பிரேமதாசவும் ஐ.தே.கவுக்காகவே கூட்டங்களை நடத்துகிறார். அனைவரும் ஐ.தே.கவை வெல்ல வைக்கவே முயற்சிக்கின்றனர்.  

அவர்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. ரணிலும் சஜித்தும் தந்தை, மகனை போன்றவர்கள் என்பதுடன், நல்ல புரிதல்கள் உள்ளவர்கள்.  

இருவருக்கிடையிலான சந்திப்பில் வேட்பாளர் தொடர்பில் முடிவு செய்யப்படாது. உடன்பாடு எட்டப்பட்டப் பின்னர் ஐ.தே.கவின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை தெரிவு செய்யும்.  

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஓர் அமெரிக்க குடிமகன்.

மஹிந்த ராஜபக்ஷ தவிர அக்கட்சியின் அனைவரும் அமெரிக்கர்களாகும். எமக்கும் நாட்டை விட்டு வெளியேற சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் நாங்கள் நாட்டை நேசிக்கின்றோம் என்றார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுதான் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5