உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க, ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிப்பு.



ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் 
விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதுடன், அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.



ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா செயற்படவுள்ளார்.


மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, மேல் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அத்தபத்து லியனகே பந்துல குமார மற்றும் அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க, ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிப்பு. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க, ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிப்பு.   Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.