பங்காளி கட்சிகளுடான இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு இல்லை ! இன்று ஹக்கீம் வரவில்லையாம் !! - Madawala News Number 1 Tamil website from Srilanka

பங்காளி கட்சிகளுடான இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு இல்லை ! இன்று ஹக்கீம் வரவில்லையாம் !!ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சிகளுடான இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு
எதுவும் எட்டப்படவில்லை என ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மூலம் அறியக்கிடைத்தது.

அமைச்சர்கள் மனோ,திகா , சம்பிக ஆகியோர் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலில் ரனில் விக்ரமசிங்க தவிர சஜித்  ராஜித மற்றும் ரவி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள சஜித் தன்னை வேட்பாளராக நிறுத்துமாறும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ரனில் விக்ரமசிங்கவே தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த யோசனைக்கு பிரதமர் எந்த பதிலும் வழங்கவில்லை என கூறப்பட்டது .

நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற பங்காளி கட்சிகளுடனான கூட்டத்தை மனோ திகா உள்ளிட்டவர்கள் புறக்கணித்த அதேவேளை ஹக்கீம் மாத்திரம் கலந்து கொண்டிருந்தார்.

இன்று மாலை மீண்டும் பங்காளி கட்சிகள் சந்தித்த போது 
அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிஷாத் வருகை தரவில்லை என கூறப்பட்டது.

அமைச்சர் ரீஷாத் வன்னியில் இருப்பதால் வரவில்லை என கூறப்பட்ட அதேவேளை ஹக்கீம் ஏன் வரவில்லை என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.


பங்காளி கட்சிகளுடான இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு இல்லை ! இன்று ஹக்கீம் வரவில்லையாம் !! பங்காளி கட்சிகளுடான இன்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு இல்லை ! இன்று ஹக்கீம் வரவில்லையாம் !! Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5