இன்று காலை ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் இடையே நடந்த அவசர விசேட சந்திப்பு விபரம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்று காலை ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் இடையே நடந்த அவசர விசேட சந்திப்பு விபரம்


இன்று காலை ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் இடையே
 நடந்த அவசர விசேட சந்திப்பின் பிரகாரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அதற்கு அனுமதி கிடைத்தால் பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்லும் நிலை ஏற்படும்.அப்படியானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் ஆறு வாரங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து... என்ன? 

-Almashoora Madawala News
இன்று காலை ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் இடையே நடந்த அவசர விசேட சந்திப்பு விபரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் இடையே நடந்த அவசர விசேட சந்திப்பு விபரம் Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5