ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்ததற்கு இலங்கையின் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்பு.


ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு
இலங்கையின் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

பௌத்தர்களைப் பெரும்பான்மையாக கொண்ட ‘லடாக்’ பிராந்தியத்தை, தனி மாநிலமாக அறிவிக்க இந்திய அரசு எடுத்த முடிவை ஒரு பௌத்த நாடாக இலங்கை பெரிதும் பாராட்டுவதாக சியாம் நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

சியாம் நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பன்மைத்துவ சமூகத்தை கொண்டிருந்த இந்தியா, நல்லிணக்கத்தை பாதுகாத்து வருகிறது. 70 சதவீத பௌத்தர்களை கொண்ட லடாக்கை ஒரு தனி மாநிலமாக அறிவிக்க முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று லடாக்கை ஒரு தனி மாநிலமாக அறிவிக்கும் முடிவை மிகவும் பாராட்டுவதாக கூறியுள்ள அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், “லடாக் பகுதிக்கு யாத்திரை செல்லும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார். D C
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்ததற்கு இலங்கையின் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்பு. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்ததற்கு இலங்கையின் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்பு. Reviewed by Madawala News on August 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.