100 வருடம் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி பற்றி எரிந்தது... #காரணம் குளவி


 100 வருடம் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி பற்றி எரிந்தது... #காரணம் குளவி

-எஸ்.கணேசன்  -

நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள 100 வருடம் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி, திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள குறித்த விடுதியே நேற்று  மாலை 6.30 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

கிளங்கன் தேயிலை தோட்டத்தின் தோட்ட முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லாமாக ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட இந்த கட்டடம் பின்னர் இது விடுதியாக மாற்றப்பட்டது.

குறித்த கட்டடத்தின் கூரை பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை ஊழியர்கள் தீயிட்டு எரிக்க முயற்சித்த நிலையில், கட்டடத்தின் மீது தீ பரவியுள்ளது.

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
100 வருடம் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி பற்றி எரிந்தது... #காரணம் குளவி  100 வருடம் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி பற்றி எரிந்தது... #காரணம் குளவி Reviewed by Madawala News on August 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.