ஹிட்லரின் இந்துக்கள் இந்தியாவின் நாஜி அடிப்படையிலான தேசியவாதிகளின் எழுச்சி




இக்கட்டுரையானது ஸ்ரீனிக்ராவ் எனும் வட இந்திய எழுத்தாளரால் கடந்த 10 

வருடங்களுக்கு முன் (2008ல்) தென் இந்தியாவில் இருந்து வட இந்தியா வரையிலான தனது சைக்கிள் பயணத்தின் போது பதிவு செய்த பயணக்கட்டுரையில் ஒரு பகுதியாகும் , இஸ்ரேலின் ஹாரெட்ஸ் இணையளத்தில் 2019/08/24 ந் திகதி பிரதான கட்டுரையாக வெளியிட்டுள்ளது.


ஸ்ரீனிக்ராவ்: 2016 இல் புத்துயிர் பெற்ற  , 233 ஆண்டுகள் பழமைவாய்ந்த செய்தி ஊடகமான மெட்ராஸ் கூரியரின் தலைமை ஆசிரியராக இருப்பவர். டிஜிட்டல் மீடியா நிறுவனமான 7MB இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். லண்டன் ஸ்கூல் ஒப் எகனாமிக்ஸ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் , ஊடக கற்கைகளுக்கான எழுத்தாளர் ஒன்றியத்தின் முன்னைநாள் மாணவரான இவர் வெளியுறவுக் கொள்கை முரண்பாடுகள் பற்றி எழுதும் பிரபல எழுத்தாளராவார். 

இக்கட்டுரை யூத எதிர்ப்பு நாஜிக் கொள்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் நரேந்திர மோடியின் ஆர் எஸ் எஸ் கூடாரம் தனது வெறித்தனமான நாஜிக் கொள்கையை எவ்வாறு சாதகமாக முன்னெடுத்து தமது அரசியல் காய்நகர்த்தலை கொண்டு செல்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது,


தமிழில் ஏ எம் எம் முஸம்மில் ( BA Hons)

தலைவர் : மலையக முஸ்லிம் கவுன்சில் – (UCMC)

 

இலங்கை முஸ்லிம் அரசியலில் அவதானமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

          

மதச் சார்பற்ற இந்தியாவை,  இந்திய தேசியவாதம என்ற போர்வையில் இந்து தேசியவாதத்தின் ஊடாக  இந்துத்துவாவின் அடிப்படையில்  இனவாதத்தாலும் , மதவாததாலும் சுடுகாடாக மாற்றி, குஜராத்தில்  சுமார் மூன்று இலட்ச முஸ்லிம்களின் சாவுகளுக்கு மேலால் நடந்து வந்து இந்திய பிரதமாராகிய மோடியை தனது ரோல் மொடலாக அடிக்கடி எடுத்துக் கூறும் “சம்பிக ரணவகவின்” அரசியல் நகர்வுகளில் மறைந்திருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் இந்தியாவின் சம கால அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை “ ஒப்புநோக்கலாம்.


அல் ஜிஹாத் அல் கைதா எனும் தனது நூலில் பக்கத்துக்கு பக்கம் முஸ்லிம்கள் பற்றிய    மோசமான பொய்யான கருத்துக்களை எழுதி இனவாதத் தீயை 1990 களிலிருந்து இந் நாட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பரப்பி வரும் இவர் , தனது ஆலோசனையின் படியே இஸ்லாமிய திருமண சட்டத் திருத்தம், முஸ்லிம் பெண்களின் ஆடை சம்பந்தமாக போலிஸ் சட்டத்தின் மூலம் கட்டுப் படுத்துவதற்கான ஆலோசனை , தற்போது முஸ்லிம்கள் வீடுகளில் குரான் வைத்திருக்க தடை  சட்டம் கொண்டுவர முயற்சிப்பது முதல் , “காஷ்மீர் முஸ்லிம்களுக்கு செய்த (துரோகத் தனத்தில்) மோடியின் முன்மாதிரியை இலங்கையிலும் நாம் பின்பற்ற வேண்டும்” என்று பகிரங்க ஊடகங்களில் கூறியது வரை , தனது இஸ்லாமிய விரோத கருத்துக்களை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றார்.  


 அந்த சம்பிக்க தான்  சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்து எதிர்கால இலங்கையில் “ சிங்ஹ (க) நடை” போடவுள்ளார் ..........

 

ஆர்வமுள்ளவர்கள் இக்கட்டுரையை கட்டாயம் முழுமையாக வாசிக்கவும்.    


10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியதொரு சுற்றுப் பயணத்தின் போது  ‘ஹிட்லரின் டென்’ எனும் ஒரு “பூல் பார்லர்” என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எந்த வெளிநாட்டவரும் இல்லாத இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை வெறுப்புடன், இந்து தேசியவாத முகாமில் நாசிசத்தின் அபிமானம் மேலோங்கச் செய்யப்பட்டு மறுசீரமைக்கப் பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.   –


      2008 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவின் தென் முனையிலிருந்து வடக்கின் அண்மித்த பிரதேசம் வரையிலானதொரு சைக்கிள் பயணத்தை மேட்கொண்டிருந்தேன். இந்தியாவின் இந்து தேசியவாத்தத்தின் மத்திய நிலையமும் , புவியியல் மையமுமான நாக்பூரின் பள்ளத்தாக்கு பகுதியொன்றில் நிறுத்தி எனது பார்வையை ஒரு வித்தியாசமான கட்டிடத்தை நோக்கி செலுத்தினேன். அங்கு, "ஹிட்லர்ஸ் டென்" என்ற வினோதமான பெயரைக் கொண்ட ஒரு கட்டிடத்தைக் கண்டேன். ஒரு பூல் பார்லர், அதன் சுவர்கள் சிக்கலான நாஜி அடையாளங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தன , மற்றும் அதன் கடை முன்புறத்தில் – முழுமையான பொதுபார்வைக்கு காட்சியில் ஒரு ஸ்வஸ்திகா.


( ஸ்வஸ்திகா என்பது நாஜிக்களை அடையாளப் படுத்தும் கீழ் காண்பது போலானதொரு குறியீடாகும் )


 

 

 

ஸ்வஸ்திகா இந்தியாவில் ஒரு வழமைக்கு மாற்றமானதொரு சின்னம் அல்ல. சந்தைகள், கடைகள், வீடுகள், கோயில்கள், வாகனங்கள், குறிப்பேடுகள், சொத்து ஆவணங்கள் மற்றும் மொட்டையடிக்கப்பட்ட தலைகள் கூட வெர்மிலியன் அல்லது மஞ்சள் ஸ்வஸ்திகாக்களால் பூசப்படுகின்றன. பெரும்பாலும் "சுப் லேப்" என்ற சொற்களால் "நல்ல அதிர்ஷ்டம்" என்று பொருள்படும்.

                  

ஆனால் இது நிச்சயமாக ஹிட்லரின் நாஜி ஸ்வஸ்திகாவின் - கருப்பு பின்னணியில் இருந்து உருவாக்கப் பட்ட இந்து ஸ்வஸ்திகாவின்  பதிப்பு. நாஜி அடையாளத்தின் இந்த அப்பட்டமான காட்சி  நாக்பூரின் நடுவில் "ஹிட்லரின் டென்" என்ற பகிரங்க பதாகையுடன் என்ன செய்து கொண்டிருந்தது என்று சிந்தித்து ஆச்சரியப்பட்டேன். நான் அதை என்னுள் முட்டாள்தனமாக விமர்சித்துக்கொண்டு , சைக்கிலை தொடர்ந்தும் ஓட்டினேன்.

 

 

 

நாக்பூரில் உள்ள "ஹிட்லர்ஸ் டென்" பூல் பார்லர், இந்து தேசியவாதத்தின் மையப்பகுதி


                   

ஆரிய இன தூய்மை மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தை ஊக்குவித்த , மாற்றுக் கருத்துக்களை மறுத்த ஒரு நாஜி சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்த ஆறு மில்லியனுக்கும் அதிகமான யூதர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலை வெறி பிடித்த ஹிட்லர் – தன்னை பின்பற்றும் தனது வழித்தோன்றல்களை இன்று இந்தியாவில் காண்கிறார்.


இது பெரும்பாலும் பழுப்பு (மாநிற ) நிறமுள்ள மக்களை கொண்ட நாடு. இங்கே, ஹிட்லரின் பாசிச முத்திரையான சுவஸ்திகா, இந்திய சுதந்திர போராட்டத்துடன் பின்னிப்பிணைந்து இணைந்துள்ள அஹிம்சா (அகிம்சை) கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான வகையில், இன வெறுப்பு மற்றும் “இந்து தேசியவாதத்தின்” கலவையுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான இந்திய சுவையை எடுத்துள்ளது. 


அண்மையில் முக நூலில் உலாவும் ஒரு பதிவை பார்த்து அதிர்ச்சியுற்றேன். ஒரு இளம் ஹிட்லரின் படத்திற்கு பக்கதிலிடப் பட்டிருந்தப் பதிவு இவ்வாறு கூறியது. "ஓம், ஹெயில் ஆரியன், ஹெயில் ஆர்யாவார்ட்", அதாவது "ஹில் ஆரியர்கள், ஆரியர்களின் தூய்மையான நிலம் ஆரிய மதிப்புக்களுக்கான பயன் "என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அவரது பதிவு , ஹிட்லரின் படங்கள் மற்றும் பல மறுபிறவிகளுக்கு பெயர் பெற்ற விஷ்ணுகடவுளின் கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட நாஜி அடையாளங்களால் நிரம்பியுள்ளது.                     "அடால்ஃப் ஹிட்லர், இறுதி அவதாரம்," என்றும் . "இந்தியாவின் ஸ்வஸ்திகா கடவுள்" என்றும் பதிவிட்டுள்ளார். இன்னொருவர் ஹிட்லர் விஷ்ணுவின் மறுபிறவி என்று பதிவிட்டிருந்தார். அவர்களின் பதிவுகள் நவ-நாஜி வலை மன்றங்களில் மீண்டும் மீண்டும் கூறப்படும் கோட்பாட்டை பிரதிபலிக்கின்றன.

 

 

 ஹிட்லர் துணிக்கடையின் உரிமையாளர்களில் இந்திர் ஒருவரான ராஜேஷ் ஷா, மகாத்மா காந்தியின் உருவத்தால் அலங்கரிக்கப்பட்ட சட்டை ஒன்றில், ஆகஸ்ட் 28, 2012 அன்று அகமதாபாத்தில் உள்ள தனது கடைக்கு முன்னால் போஸ் கொடுத்துள்ளார்.

அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரே குரலில் கோரஸில் கருத்து தெரிவிக்கிறார்கள்: "ஜெய் ஸ்ரீ ராம், ஹெயில் ஹிட்லர்" ( ராமகடவுளுக்கு வெற்றி, ஹிட்லருக்கு வெற்றி என்று கோஷமிடுகின்றனர். ("ஹெயில் ஸ்ரீ ராம், ஹெயில் ஹிட்லர்"), "நாஜி தி கிரேட்-  நாஜிக்கள் மேன்மையானவர்கள் , "ஹிட்லர் இந்திய தேசியவாதியின் ஆதரவாளர்.


" அவர்களில் பலர் "அடோல்ஃப் ஹிட்லர், ஒருபோதும் சொல்லாத மிகச் சிறந்த கதை" என்ற தலைப்பினாலான 100,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்ற ஒரு யூடியூப் வீடியோவைப் பகிர்ந்து கொள்கின்றனர். ,


         

மேற்குறித்த பதிவுகள் யூத எதிர்ப்பு இனவாதம், தீவிர இந்து தேசியவாதம் ஆகியவற்றின் தவறான கருத்துக்களின் கலவையாகும். ஆரிய இனத்தின் மேன்மை ("ஆரிய" இந்தியர்களைக் குறிக்கம்) மற்றும் "பயங்கரவாதத்தை புனிதப்படுத்துதல், க்ஷத்திரியக் குறியீடு மற்றும் பகவத்-கீதை" ஆகியவற்றில் பொதிந்துள்ள நாஜி பிரச்சாரத்தின் பரவலான புராணத்தைத் தூண்டுவது, இந்த பதிவுகள். “இந்து புராணங்களின் இருண்ட யுகமான கலியுகத்தை முடிவுக்கு கொண்டுவர ஹிட்லர் பிறந்தார்.” என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.


        

உலகெங்கிலும் உள்ள நவ-நாஜி சகாக்களுடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ள இந்திய இந்து நாஜிக்களின் பெரிய மற்றும் வளர்ந்து வரும் சமூகம் இருப்பதை சமூக ஊடகங்களில் அலசி அரையும் போது காணக்கூடியதாயுள்ளது.

மேலும் பல சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களும் ஹிட்லருக்கு விசித்திரமான, ஆனால் வெறித்தனமான ஆதரவைக் கொண்டுள்ளன. , இக்கொள்கையானது   இந்து தேசியவாதத்துடன் கலந்து மறுசீரமைக்கப் பட்டுள்ளது.. பிரபலமான இந்திய வலை இணையதளமான rediff.com இல் "ஹிட்லர் நல்லவராக இருந்தார்" என்று கூறுகின்றது.


இந்தியாவில் 24 மணி நேர ஆங்கில மொழி செய்தி தொலைக்காட்சி சேனலான நியூஸ் எக்ஸ் நடத்தும் யூடியூப் சேனலில், "நானும் ஹிட்லரை நேசிக்கிறேன், அவருடைய மிகப்பெரிய ரசிகர்களில் ஒருவன்! ஹிட்லரை வணங்குங்கள்!" என்று ஒருவர் கருத்து தெரிவித்தது கமென்ட் பதிந்துள்ளார். . இந்தியாவை தளமாகக் கொண்ட வாட்ஸ்அப் குழுக்களும் ஹிட்லரின் "நேர்மறையான பங்களிப்புகளை" விவாதிப்பதைக் கண்டேன். அவர்கள் அவரை ஜெர்மனியின் சிறந்த தலைவராக, "தேசபக்தி தேசியவாதியாக" சித்தரிகின்றனர், அவர் "துரோகிகளை"தான் தண்டித்தார்” என்று கூறுகின்றனர். .

ஹிட்லருக்கான இந்த விசித்திரமான அபிமானம் ஆதரவு சமூக ஊடகங்களைத் தாண்டி ஏற்கனவே எங்கள் கல்வி முறைக்குள் நுழைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாடசாலைகள், சாதுர்யமாகவோ அல்லது இல்லாமலோ, ஹிட்லரின் "சாதனைகளை" பரப்புகின்றன.


ஒரு நாஜி அல்ல: பாரம்பரிய இந்து “ஸ்வஸ்திகா”, இங்கே ஒரு கோயில் பூசாரியின் மொட்டையடித்த தலையில் காணப்படுகிறது, பார்வைக்கு நாஜி அடையாளத்தைப் போல் காட்சியளித்தாலும் அதன் 'சிறகுகளில்' ஒன்றில் சதுரமாக அமைந்திருக்கின்றது,

              

2004 ஆம் ஆண்டில், இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் , குஜராத் மாநில வாரியத்தால் வெளியிடப்பட்ட பாடசாலை பாடப்புத்தகங்கள் ஹிட்லரை ஒரு ஹீரோவாக சித்தரித்தன, பாசிசத்தை மகிமைப்படுத்தின. பத்தாம் வகுப்பு சமூக ஆய்வுகள் பாடப்புத்தகத்தில் "ஹிட்லர், சுப்ரீமோ" மற்றும் "நாசிசத்தின் உள் சாதனைகள்" என்ற தலைப்பில் அத்தியாயங்கள் இருந்தன.

"நாசிசத்தின் கருத்தியல்" பற்றிய பகுதி பின்வருமாறு:.............

"ஹிட்லர் ஜேர்மன் அரசாங்கத்திற்கு கண்ணியத்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தினார். . அவர் யூத மக்களுக்கு எதிரான எதிர்ப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டார். மற்றும் ஜேர்மன் இனத்தின் மேலாதிக்கத்தை ஆதரித்தார்."

2011 ஆம் ஆண்டில் தமிழக மாநிலத்தால் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு சமூக ஆய்வுகள் பாடநூல் (2017 வரை பல திருத்தப்பட்ட பதிப்புகளுடன்) ஹிட்லரை மகிமைப்படுத்தும் அத்தியாயங்கள், அவரது "எழுச்சியூட்டும் தலைமை," "சாதனைகள்" மற்றும் நாஜிக்கள் "ஜேர்மன் அரசை எவ்வாறு மகிமைப்படுத்தினார்கள் " என்று புகழ்ந்தன.


2012 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஒரு தனியார் பாடசாலயில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பிரெஞ்சு பாடம் எடுக்கும் போது “J’admire” என்று தொடங்கி ஒரு வாக்கியத்தை முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டபோது, அவர்கள் அதிகம் பாராட்டிய வரலாற்று நபரின் பெயரைத் தொடர்ந்து, 25 மாணவர்களில் ஒன்பது பேர் ஹிட்லரைத் தேர்ந்தெடுத்தனர். தென்னிந்திய நகரமான மதுரை மாணவர்கள் ஹிட்லரைப் போற்றுவதை நியாயப்படுத்தினர்,


                       

“Mein Kampf" on sale at Mumbai international airport, December 2017.Shrenik Rao / Madras Courier

மும்பை சர்வதேச விமான நிலையத்தில், டிசம்பர் 2017 இல் ஹிட்லரின் "மெய்ன் காம்ப்" புத்தகம் விற்பனைக்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

 

      

மெய்ன் காம்ப்ஃப் இந்தியாவின் பிரதான நீரோட்டத்திற்குச் சென்று, இந்தியாவின் வணிகப் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு "கட்டாயம் படிக்க வேண்டிய" ஒரு பிரதான புத்தகமாக மாறியுள்ளது. மெய்ன் காம்ப்பின் ஆங்கில மொழி பதிப்புகள் விமான நிலையங்கள், புத்தகக் கடைகள் மற்றும் ஆன்லைன் சந்தைகளில் புத்தக அலமாரிகளை நிரப்புகின்றன, அதே நேரத்தில் மலிவான திருட்டு பதிப்புகள் முக்கிய நகரங்களில் நடைபாதை கடைகளை நிரப்புகின்றன. இந்திய புத்தக-சில்லறை விற்பனை சங்கிலியான கிராஸ்வேர்ட் மூன்று ஆண்டுகளில் 25,000 பிரதிகள் விற்றுள்ளது. ஜெய்கோ மட்டும் ஏழு ஆண்டுகளில் 100,000 பிரதிகள் விற்றது. இது குஜராத்தி, இந்தி, மலையாளம், பெங்காலி மற்றும் தமிழ் ஆகிய பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் அந்த பதிப்புகள் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன.


ஒரு கொலைகார வெறியைப் கொள்கையாக புரட்சியாக போற்றுவது "குளிர்ச்சியானது" என்று இளைஞர்கள் நினைப்பது நிச்சயமாக ஆபத்தானதாகும் .


இது இளைஞர்களின் அப்பாவித்தனமா , அல்லது இந்து தேசியவாதிகளின் அரசியல் ஆதரவின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் விளைவாகுமா? 


              

சாதாரண உரையாடல்களில், ஆச்சரியப்படும் எண்ணிக்கையிலான நன்கு படித்த, உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் ஹிட்லருக்கு மரியாதைக்குரிய, கிட்டத்தட்ட வெறித்தனமான, போற்றுதலைப் பகிர்ந்து கொள்கின்றனர். . "இந்த நாட்டிற்கு ஹிட்லரைப் போன்ற ஒரு சர்வாதிகாரி தேவை" என்பது உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற நன்கு படித்த இந்தியர்களிடமிருந்து நான் கேள்விப் படுகின்றதொரு ஒரு பொதுவான சுலோகமாகும். . 2002 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், 17 சதவீதம் பேர் அடோல்ஃப் ஹிட்லரை "இந்தியாவில் இருக்க வேண்டிய தலைவர்" என்று ஆதரித்தனர்.


ஐஸ்கிரீம்கள் நிலையங்கள் , பூல் பார்லர்கள், உணவகங்கள், துணிக்கடைகள், வீட்டு அலங்காரக் கடைகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் "ஹிட்லர்" அல்லது "நாஜி" ஐ தங்கள் பிராண்ட் பெயர்களாகப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிரான இந்தியரல்லாதவர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்திய காவல்துறையினர் இந்தியாவின் இந்து தீவிரவாத குழு சிவசேனாவைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.

           

பல இந்திய அரசியல்வாதிகள் ஹிட்லரின் சித்தாந்தத்தைத் தூண்டும் மற்றும் அவரைப் பற்றி தங்கள் அபிமானத்தை பகிரங்கமாகக் கூறி பலமான வாழ்க்கையை உருவாக்கியுள்ளனர். "இது இன்று இந்தியாவில் தேவைப்படும் ஒரு ஹிட்லர்" என்று இந்து தீவிரவாத அமைப்பான சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே 1967 இல் கூறினார்.


1993 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில், "முஸ்லிம்கள், யூதர்களாக நாஜி ஜெர்மனியில் இருந்ததைப் போலவே கருதப்பட்டால்" என்று அவர் கூறினார். . "நீங்கள் மெய்ன் காம்பை எடுத்துக் கொண்டால், 'யூதர்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, 'முஸ்லீம்' என்ற வார்த்தையை வைத்தால், அதைத்தான் நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

 

 

தீவிர இந்து தேசியவாதக் குழுவின் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தன்னார்வலர்கள் செப்டம்பர் 30, 2017 அன்று இந்தியாவின் அஜ்மீரில் நடைபெறும் "பாதை-சஞ்சலன்" அல்லது பாத யாத்திரையில் பங்கேற்கிறார்கள். REUTERS / Himanshu Sharma

 

" நான் பார்த்த ஹிட்லர்ஸ் டென்" என்ற பூல் பார்லர் அமைந்துள்ள நாக்பூருக்கு நாஜி தலைவருடன் ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது. இங்கே, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும், மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவும் தோன்றிய குழு இங்கு தான் ஆரம்பமானது. இது     நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட வலதுசாரி இந்து அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைவர்களுக்கு அவர் ஒரு சிறந்த ஹீரோ..


தீவிர இந்து தேசியவாதியும், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரம்ப வழிகாட்டியுமான வி.டி.சவர்க்கர், ஹிட்லரின் நாசிசத்திற்கு மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார் மற்றும் ஹிட்லரின் யூத எதிர்ப்பு படுகொலைகளை ஆதரித்தார். "ஹிட்லர் ஒரு நாஜியாக கடந்து செல்வதால் அவர் ஒரு மனித அரக்கனாக இருக்க வேண்டும் என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை," என்று அவர் 1940 இல் ஒரு இந்து கூட்டத்தில் உரையாற்றினார் இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை தூய்மைப்படுதும் முயற்சியில்  அவர் எழுதினார்:     "இந்தியாவில் நாம் இந்துக்கள் வலுவாக வளர்ந்தால், காலப்போக்கில் இந்த முஸ்லீம் நண்பர்கள் அதற்கு பதிலாக ஜெர்மன்-யூதர்களின் பங்கை வகிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டு எழுதினார்."


     ஹிட்லருக்கும் அவரது இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலுக்கும் இந்த வெறித்தனமான பாராட்டு ஒரு மாறுபாடு அல்ல. இது ஆர்.எஸ்.எஸ் தலைமையினரிடையே இருந்தது. "வெறுப்பின் குரு" என்றும் அழைக்கப்படும் மற்றொரு ஆரம்ப ஆர்.எஸ்.எஸ் தலைவரான எம்.எஸ். கோல்வால்கர், ஹிட்லரின் நாஜி கலாச்சார தேசியவாதத்தை சிலை செய்தார், மேலும் ஹிட்லரின் சர்வாதிகார மற்றும் பாசிச முறையை பின்பற்றி ஒரு இந்து தேசத்தை உருவாக்க விரும்பினார். இது ஒரு கவனக்குறைவான, சிந்தனையற்ற தூண்டுதல் அல்ல, மாறாக கவனமாக திட்டமிடப்பட்ட அரசியல் நடவடிக்கை.


முகமது அலி ஜான் கான், முன், டிசம்பர் 10, 2015 வியாழக்கிழமை, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி புறநகரில் உள்ள பிஷாரா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்கிறார்.பிரசாந்த் விஸ்வநாதன் / ப்ளூம்பெர்க்

மூன்று முறை தடை செய்யப்பட்டு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பெயரிடப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இப்போது மோடியின் பிரதம மந்திரி பதவியில் அரசியல் மைய நிலைக்கு திரும்பியுள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிளைகளுடன், வன்முறை, பாசிச சித்தாந்தத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்து நாசிசத்தின் ஒரு வினோதமான புதிய இழை, குறிப்பாக இளைஞர்களிடையே, அதன் அசிங்கமான கொள்கையால் தலையை நிரப்புகின்றது . குறுகிய மத மற்றும் இன அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்து இந்து தேசியவாதத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்தியாவின் சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களின் அரசியல் எதிரிகளின் தலைகளை துண்டிப்பதையும் அதன் தலைவர்கள் பெருமை பேசுகிறார்கள்.

இந்தியாவின் சிறுபான்மையினர் மீதான வளர்ந்து வரும் அவமதிப்பு சாதாரண தூண்டுதலுடன் நிறைவேற்றப்பட்ட இனவெறி கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.


 ஏறக்குறைய 82% மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தர அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள் என்பதை பல இந்து இந்தியர்கள் எவ்வாறு நம்ப முடியும்?

குஷ்வந்த் சிங் 2003 இல் எழுதியது போல, "இந்து அடிப்படைவாதத்தின் ஜாகர்நாட் சகிப்பின்மை கோவிலில் இருந்து வெளிவந்துள்ளது, மேலும் அதன் பயணத்தில் [அணிவகுப்பில்] உள்ளது. ...

 

இந்தியாவின் அடிப்படை சித்தாந்தமானது  , நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களின் அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டது. இப்போது, நமது இந்திய அரசியல் கட்சிகள் மற்றும் தொகுதிகள் ஹிட்லரின் அதே இனப்படுகொலை நோக்கங்களை ஆதரிக்கும் மறுபயன்பாட்டு நாசிசத்துடன், அமைதியான மதமான இந்து மதத்தை பயன்படுதக்கூடாது என்பதை உறுதிசெய்வது நம்முடையது பொறுப்பாகும். , ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டடி ஆஃப் ஜர்னலிசம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் மாணவர், ஷ்ரெனிக் ராவ் ஒரு டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 232 ஆண்டுகள் பழமையான செய்தித்தாள் மெட்ராஸ் கூரியரை டிஜிட்டல் வெளியீடாக ராவ் புதுப்பித்தார், அதில் அவர் தலைமை ஆசிரியராக உள்ளார். 


ஹிட்லரின் இந்துக்கள் இந்தியாவின் நாஜி அடிப்படையிலான தேசியவாதிகளின் எழுச்சி ஹிட்லரின் இந்துக்கள் இந்தியாவின் நாஜி அடிப்படையிலான தேசியவாதிகளின் எழுச்சி Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.