அக்குறணை நூலகத்தில் அங்கத்துவம் பெறுபவர்களுக்கு பரிசுப் பொதி... வாசிப்பை ஊக்குவிக்க பரிசுத்திட்டம் அமுலானது.


(​மொஹொமட் ஆஸிக் )
அக்குறணை பொது  நூலகத்தில் எதிர்வரும் மாதத்தில் அங்கத்துவத்தை  பெற்றுக் கொள்ளும்
  முதல் 100 அங்கத்தவர்களுக்கு பரிசுப்  பொதிகளை  வழங்க  உள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஐ.எம். இஸ்திஹார்  தெரிவித்தார்
அக்குறணை பொது  நூலகத்தில் நேற்று   இடம் பெற்ற கூட்டம் ஒன்றில்  அவர் இதனை  தெரிவித்தார்.


அக்குறணை பிரதேச சபையின் பொது  நூலகத்திற்காக பாரிய அளவில் பணம் செலவு செய்த போதும் அதன் பலனை பெற்றுக்  கொள்ளும்  பயனாளிகளின் எண்ணிக்கை  மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்த  அவர், நூலகத்தில் அங்கத்துவத்தை  அதிகரிக்கும்  ஊக்குவிப்பாக  இப்  பரிசுத்திட்டம்  அமுல்  படுத்த உள்ளதாகவும்  தெரிவித்தார்.


எதிர்வரும்  இலக்கிய மற்றும் வாசிப்பு  மாதங்களை  முன் வைத்து  இத் திட்டம் அமுல்  படுத்துவதாகவும் அவர்  தெரிவித்தார்.


அககுறணை ஏழாம் கட்டையில் அஸ்ஹர் தேசிய பாடசாலையை அன்மித்து  அமைந்துள்ள பிரதேச சபையின் கீழ் இயங்கும்  பொது நூலகத்திற்கு  அன்மையில் அமைந்துள்ள  பாடசாலைகளில்  இருந்து மாணவ மாணவிகளை அங்கத்துவர்களாக  சேர்த்துக் கொள்வதுடன் திறந்த அங்கத்துவர்களயும்  சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க  உள்ளதாகவும்  தெரிவித்தார்.


எதிர்வரும் மாதங்களில் வழங்க உள்ள100 பரிசுப் பொதிகளை பெற்றுக் கொள்வதற்கு  அங்கத்துவத்தை பெரும் முதல் 100 அங்கத்தவர்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2019 08 20 ஆஸிக்
அக்குறணை நூலகத்தில் அங்கத்துவம் பெறுபவர்களுக்கு பரிசுப் பொதி... வாசிப்பை ஊக்குவிக்க பரிசுத்திட்டம் அமுலானது. அக்குறணை  நூலகத்தில்  அங்கத்துவம் பெறுபவர்களுக்கு  பரிசுப்  பொதி...  வாசிப்பை  ஊக்குவிக்க பரிசுத்திட்டம்  அமுலானது. Reviewed by Madawala News on August 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.