புதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது?


புதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது
என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் OISL அறிக்கையின் அடிப்படையிலேயே புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரின் நியமனம் குறித்து விமர்சிக்க அமெரிக்காவுக்கு எந்த தகுதியும் இல்லை.

எனவே cesspit என்று வர்ணித்ததை அமெரிக்கா உடன் வாபஸ் பெறவேண்டும்.
அத்துடன் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை.


ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மொத்த மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை மேற்கோள்காட்டி புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதிக்கு எதிராக அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதை இலங்கையை தடுத்தது அமெரிக்கா எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது? புதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது? Reviewed by Madawala News on August 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.