முந்திச் செல்ல இடம் கொடுக்காத வேன் மீது தாக்குதல் நடத்திய VIP யின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு CCD அழைப்பு.



கொழும்பு கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்று
தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.

முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த கெப் வண்டி மற்றும் அதனுடன் பயணித்த டிபெண்டர் வண்டியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் வேன் ஒன்று தாக்கப்பட்டிருந்தது.

தமது வாகனங்களுக்கு முந்திச் செல்வதற்கு இடமளிக்காததன் காரணமாகவே தான் தாக்கப்பட்டதாக அந்த வேனின் சாரதி கூறினார்.

இதில் CAG 0550 இலக்கம் கொண்ட ப்ராடோ வண்டி இல. 37 கால்லேகம , இங்கிரிய என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

CAD  8850 என்ற இலக்கம் கொண்ட  டிபண்டர்  வண்டி இல. 34 கால்லேகம , இங்கிரிய என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்திச் செல்ல இடம் கொடுக்காத வேன் மீது தாக்குதல் நடத்திய VIP யின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு CCD அழைப்பு. முந்திச் செல்ல இடம் கொடுக்காத வேன் மீது தாக்குதல் நடத்திய VIP யின்  பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு CCD அழைப்பு. Reviewed by Madawala News on July 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.