(வீடியோ) தூய குடி நீரினை கல்குடாவிற்குள் கொண்டுவருவதர்கு பிரதான காரணமான இருந்த ஏ.டி.றியாஸ் மறைக்கப்படுவது எதற்காக.?


கல்குடா மக்கள் எதிர் நோக்கிய முக்கிய பிரச்சனையான தூய குடிநீரானது இன்று ஓரளவேனும்
தீர்க்கப்பட்டுள்ள விடயமாக காணப்படுகின்றதென்றால் அதற்கு முக்கியமான காரணகர்த்தாவாக இருந்த உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏடிபி.றியாசுடைய பங்களிப்பானது மிக இன்றி அமையாத ஒன்றாக காணப்பட்டது. ஆனால் இன்று கல்குடாவிற்கு தூய குடிநீரினை கொண்டு வருகின்றோம் அல்லது தூய குடிநீரினை ஆயுதமாக பயண்படுதி அதற்கு பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் செய்ய முற்படுபவர்கள் ஏடிபி.றியாசினை தூய குடிநீரினை பெற்றுக்கொண்ட விடயத்தில் மறைத்து ஓரங்கட்ட நினைப்பது எதற்காக என்ற பெரும் கேள்வியும், அரசியல் நாடகமும் கல்குடா பிரதேசத்தில் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியின் மிகம்பெரிய தூர நோக்கு திட்டங்களில் ஒன்றாக கல்குடாவிற்கான தூய குடி நீர் திட்டமானது செயற்திட்ட வடிவில் சகல விடயங்கலும் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தது. அதனை முழு வடிவில் அவர் செயற்படுத்துவதர்கு முன்னால் 2010ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் அவரை திட்டமிட்டு தோற்கடித்த வேலையில் அவரினால் அத்திட்டத்தினை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு பிறகு அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் ஷஹ்வி கிழக்கு முதலமைச்சராக இருந்த நஜீப்.ஏ.மஜீத் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து குடிநீர் திட்டத்திட்டத்துக்கான செயற்திட்டத்தினை கையளித்திருந்தார். ஆனால் அதுவும் கை கூடாத நிலையிலே இருந்தது.



மறுபக்கத்திலே கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளராக இருந்த எஸ்.ஏ.எம்.றியாஸ் தனது பிரதேச திட்டமிடல் அறிவினை வைத்தும், தான் அமீர் அலியிடம் கற்றுகொண்ட அரசியல் செயற்திட்ட அபிவிருத்திகள் சம்பந்தமான அறிவினை வைத்தும் கல்குடா மஜ்லிஸுஸ் ஷூரா சபையின் முக்கிய குறிக்கோளாக தூய குடீர் திட்டத்தினை கையில் எடுத்து அமைச்சர் அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமிடம் முக்கிய வேண்டுகோளாகவும் கல்குடா மக்களின் மிக முக்கியமான தீர்க்கப்பட வேண்டிய  அடிப்படை தேவையாகவும் கையளித்தார்.



அதற்கு பின்னர் பல கூட்டங்கள், சந்திப்புக்கள் என பல தரப்பட்ட முன்னெடுப்புக்களை எல்லாம் கல்குடா மஜ்லிஸூஸ்ஷூரா சபை மூலம் ஏற்பாடு செய்த ஏடிபி.றியாஸ் 2010ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் ஹக்கீமினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேட்பாளர் ரியாலையும் இணைத்துக்கொண்டு குறித்த கல்குடா மக்களின் அடிப்படை தேவையாக கருதப்பட்ட தூய குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் மிகவும் தீவிரமாக செயற்படத்தொடங்கினார்.

அவரோடு வை.எஸ்.ஓ ஹனிபா, மற்றும் கல்குடா மஜ்லிஸூஸ் ஷூரா சபை உறுப்பினர்கள் ஆகியோர்களே முன்னின்று உழைத்தனர்.



அதிலும் கல்குடாவில் முக்கிய அடிப்படை பிரச்சனையாக உள்ள குடி நீருக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கின்ற சமயத்தில் அசைக்க முடியாத கல்குடாவின் அரசியல் தலைமையாகவும், ஆளுமையாகவும் இருக்கின்ற அமீர் அலியை மக்கள் மனங்களில் இருந்து தூக்கியறிந்து அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டி விடலாம் என்பதும் அதற்கு பிறகு தங்களின் என்னப்படி கல்குடாவின் அரசியல் ஆதிக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்பதுவுமே   அவர்களுடைய மிக முக்கியமான தூர நோக்கு திட்டமாகவும் இருந்தது.  இறுதியில் குடிநீரும் தற்காலியமாக வழங்கப்பட்டது, அல்-ஹம்துலில்லாஹ். ஆனால் அதற்கு பிறகு 2015ல் வந்த பாராளுமன்ற தேர்தலில் அல்லாஹ்வின் நாட்டப்படி அமீர் அலியை கல்குடா மக்கள் மீண்டும் பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்தனர் என்பது எழுதப்பட்டுள்ள வரலாறாகும்.



இவ்வாறு தூய குடி நீருக்கான படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்க.. ரியால்தான் குடிநீரினை கல்குடாவிற்குள் கொண்டு வந்தார் என்று புதுப்பொழிவுடன் மீண்டும் படங்கள் திரையிடப்படப்பட்டன. ஆனால் கல்குடாவிற்கு எங்கிருந்து குடி நீரினை கொண்டு வரவேண்டும்? அதனை எவ்வாறு வழங்க வேண்டும்.? கடலிருந்து கொண்டு வருவதா.? ஆற்றிலிருந்து கொண்டு வருவதா.? குளத்திலிருந்து சுத்திகரித்து தேசிய கடதாசி ஆலை மூலம் வழங்குவதா.? என்ற கல்குடா சம்பந்தமான, பரீட்சையமான எதுவித அறிவுகளும் இல்லாத நிலையில் ஏடிபி.றியாசும் கல்குடா மஜ்லிஸூஸ் ஷூரா சபையுமே ரவூஹக்கிமிடம் செயற்திட்டத்தினை கையளித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றதர்கு பிற்பாடு எதிர்கால அரசியலை நோக்கிய பயணமாக ரியால் குறித்த விடயத்தினை கையில் எடுத்து செயற்படத் தொடங்கினார். அதற்கு ஏடிபி.றியாஸ் உட்பட அவருடைய குழுவினருடைய ஆதரவும் ஒத்துளைப்பும் ரியாலுக்கு கிடைத்தது.



எனவே,. முற்று முழுதாக ஏடிபி.றியாசின் ஆலோசனையின் படியிலும் அவருடைய திட்டமிடல் சார்பான அறிகைகளை வைத்தும் ஓர் செயற்திட்டமாக கல்குடா மஜ்லிஸூஸ் ஷூரா சபையினால் முன்னெடுக்கப்பட்ட தற்காலிகமான தூய குடிந்நிர் திட்டத்தின் இரண்டாம் கட்ட நகவுகளுக்கான கலந்துறையாடல்களும், முன்னெடுப்புகளும் தற்பொழுது தேர்தல்களை அடிப்படையாக வைத்து அமைப்பாளர் ரியாலினால் மீண்டும் கல்குடாவில் அலசப்பட்டு வருகின்ற நிலையில் முக்கிய காரணகர்த்தாவாக செயற்பட்ட ஏடிபி.றியாசுடைய தியாங்களும், அவருடைய விடாப்பிடியான செயற்பாடுகளும் ஒட்டு மொத்தமாக மறைக்கப்பட்டு அற்பத்தனமாக குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அவர் ஓரங்கட்டப்படுகின்றார் என்பதே உண்மையாக கல்குடாவிற்கான தூய குடிநீர் எவருடைய அர்ப்பணிப்பினால் கொண்டுவரப்பட்டது என்பதனை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் கல்குடாவின் புத்திஜீவிகளினதும், மக்களினதும் ஆதங்கமாகவும், கவலையாகவும் உள்ளது.
(வீடியோ) தூய குடி நீரினை கல்குடாவிற்குள் கொண்டுவருவதர்கு பிரதான காரணமான இருந்த ஏ.டி.றியாஸ் மறைக்கப்படுவது எதற்காக.? (வீடியோ) தூய குடி நீரினை கல்குடாவிற்குள் கொண்டுவருவதர்கு பிரதான காரணமான இருந்த ஏ.டி.றியாஸ் மறைக்கப்படுவது எதற்காக.? Reviewed by Madawala News on July 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.