VIDEO : ஹக்கீமோடு ஒப்பிடும்பொழுது தேசிய தலைமைக்கு மிகத்தகுதியானவர் ரிசாட்டே பதுர்தீனே...


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ஹக்கீமோடு ஒப்பிடும்பொழுது தேசிய தலைமைக்கு மிகத்தகுதியானவர்
ரிசாட்டே பதுர்டீனே. காங்கிரசின் கல்குடா இணைப்பாளர் அன்வர் நெளசாட்..

வீடியோ- 
அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய தலைவர் ரிசாட் பதுர்டீனை தவிர வேறு எவரும் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு தேசிய தலைமையாக வருவதற்கு தகுதிகள் கிடையாது என முஸ்லிம் காங்கிரனுடைய தலைமை அப்துர் ரவூப் ஹிபதுல் ஹக்கீமுடன் ஒப்பிட்டு தனது கருத்தினை தெரிவித்த கல்குடாவிற்கான முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் அன்வர் நெளசாட் அதனோடு நின்று விடாமல் கட்சியின் தவிசாளறும், கல்குடாவின் அரசியல் தலைமையுமான அமீர் அலி மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அரசியல் தலைமைக்கு மிகத்தகுதியானவரும் கூட என ஆணித்தமாகவும் பகிரங்கமாகவும் தனது கருத்தினை கூறி விட்டு இன்று கல்குடாவில் இருவருக்கும் எதிராக வலம் வந்து கொண்டிருப்பதானது நகைப்புடையதாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும் தேசிய தலைமை என்பது தேசிய ரீதியிலான சவால்களுக்கு எவ்வாறு.? முகம்கொடுப்பது, தேசிய ரீதியில் ஆதரவு பெற்ற தலைமையா,? தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட அங்கீகாரங்களை குறிப்பதா.? என்பவைகளோடு தனியே கிழக்கு மாகாணம் மாத்திரமல்லாது வடமாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் கொழும்பு மாகாணம், மத்தியமாகாணம், என  அகில இலங்ககை மக்கள் காங்கிரசிற்கான ஆதரவு மிகத் துள்ளியமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அவைகளுடன் சேர்ந்து ரிசாட் பதுர்டீனை ஒப்பிட்டு பார்க்குமிடத்து அவரை தேசிய தலைவர் என அழைப்பது சாலப்பொருத்தமாகும்.

அது மாத்திரமல்லாமல் பரந்து வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் சம்பந்தமாக மிகக்கரிசனையோடு ரிசாட் செயற்பட்டு வருகின்றார். அந்த வகையிலும் அவர்தான் தேசிய தலைவராக அடையளம் காணப்படுகின்றார். அத்தோடு தேசிய அரசாங்கங்களை தீர்மானிக்கும் சத்தியாகவும் அவர் இருந்து வருகின்றார். முஸ்லிம்களுடைய பிரச்சனைகளையும், தேசிய பிரச்சனைகளையும் ஒரு சிறுப்பான்மை சமூகத்தின் ஏகோபித்த தலைவர் என்ற வகையிலும், அமைச்சரவை அந்தஸ்துள்ள வர்த்தக அமைச்சர் என்ற வகையிலும் சர்வதேச மயப்படுத்தி அதற்கான தீர்வுகளை உடனே பெறக்கூடிய வகையில் துள்ளியமாக அரசியல் காய்நகர்தல்களை செயற்பாட்ட் வடிவில் கொண்டுவருவதில் அவருக்கு அவரே நிகர்.

இந்த நிலையில் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களின் கனவின் அடிப்படையில் தமிழ் பேசுகின்ற முஸ்லிம் சமூகத்தினையும் அதனோடு சேர்த்து ஏனைய சமூகங்களையும் ஒன்றிணைத்து சமூகங்களின் தேசிய தலைமயாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை ரிசாட் பதுர்டீனையே தேசிய தலைமையாக பெரும் தலைவருக்கு பிற்பாடு ஏற்று கொண்டேயாக வேண்டும், அதுவே நிதர்சனமும் கூட. அது மட்டுமல்லாமல் நாங்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசுடைய தீவிர போராளிகளாக இருந்தாலும் தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமையான ரவூப் ஹக்கீமோடு ரிசாட் பதுடீனை தேசிய தலைமைக்கான தகுதி விடையத்தில் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது அதற்கான முழுமையான தகுதியும், அங்கீகாரமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய தலைமையான ரிசாட் பதுர்டீனுக்கே இருக்கின்றது. அதனை ஒட்டுமொத்த உள்நாட்டு சமூகமும், சர்வதேச சமூகமும் அக்கீகரித்து வருகின்றமையினை பார்க்க கூடியதாகவே உள்ளது.

இவ்வாறு தனது முழுமையான கருத்தினை தெரிவித்த இணைப்பாளர் அன்வர் நெளசாட்… இன ஐக்கியம் வாயளவில் பேசிவிட்டு கொள்கை அளவில் சம்மந்தப்படாமல் இருக்கின்ற தலைமைகளுக்கு மத்தியில் ரிசாட்பதுர்டீன் மாறுபட்ட நிலையிலும் எல்லோரும் தகுந்த உதாரண புருசராகவும் செயற்பட்டு வருகின்றார். இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை சமூகத்திற்கு திட்டமிடப்படு வடிவடிவமைக்கப்பட்ட அரசியல் போராட்டத்துக்கான மிகச்சிறந்த தலையாகத்தான் நான் ரிசாட்பதுர்டீனை கணித்துளேன். அதே போன்று மறுபக்கத்திலே  கட்சியினுடய தவிசாளரும் கல்குடாவின் அரசியல் தலையுமான அமீர் அலியும் சேர்த்து போற்றப்பட கூடிய ஒருவராகவே இருக்கின்றார்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை சந்தித்து விட்டு, வாக்குறுதியளித்து விட்டு, மக்களை ஏமாற்றும் ஏனைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகலில் இருந்து முழுமையாக அமீர் அலி வெளியில் நின்று தமிழ் முஸ்லிம் சமூகங்களை ஒரே கண்ணால் பார்க்க கூடிய அரசியல்வாதியாக மட்டக்களப்பில் செயற்பட்டு வருகின்றார். அவர் ஒரு முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்தவர் என்றாலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சகல மக்களுக்கு அரசியல் தலைமையினை வழங்கக்கூடிய சகல தகுதியும் அவரிடம் இருக்கின்றது.

ஏனென்றால்.! கிழக்கிலே முஸ்லிம் அரசியல்வாதிகள் தனியே முஸ்லிம் வாக்குகள் என்றும், தமிழ் அரசியல்வாதிகள் தனியே தமிழ் வாக்குகள் என்றும் பயனித்து கொண்டிருந்த நிலையில்.! அமீர் அலி மட்டுமே முஸ்லிம் தமிழ் கலப்புடன் சிறந்த அரசியல் கட்டமைப்பினை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தி பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளின் மூலம் வெற்றியடைந்து புதிய அரசியல் காலச்சரத்தினை ஏற்படுத்திக்காட்டியவர். ஆகவேதான் மாவடத்துக்கு அரசியல் தலைமை தாங்குவதற்கு வேறு எவரும் பொருத்தமானவராக இருப்பார்கள் என்பதனை என்னால் கூற முடியாது.

இவ்வாறு நாட்டினுடைய சமூகத்திற்கு முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையான ரவூப் ஹக்கீமுடன் ஒப்பிட்டு இவர்களில் யார் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தகுதியானவர்கள் என்ற பார்வையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை ரிசாட்டை பற்றியும், அதன் தவிசாளர் அமீர் அலியை பற்றியும் மிகவும் துள்ளியமான உண்மைகளையும், என்றும் மாற்றமடையாத ஆணித்தரமானதன கருத்துகளையும் பகிரங்கமாக தெரிவித கல்குடாவிற்கான முஸ்லிம் காங்கிரசினுடைய இணைப்பாளர் அன்வர் நெளசாட் இன்று ஹரிஸ் மூலமாக வாழைச்சேனைக்கு தனியான பிரதேச சபை பெற்றுக்கொடுக்க போவதாகவும், கல்குடாவில் செயற்பாடிழந்து கிடக்கும் முஸ்லிம் காங்கிரசினை தூக்கி நிறுத்தப்போவதாகவும் கல்குடாவில் வலம் வந்து கொண்டிருப்பதனை பார்க்கின்ற பொழுது இவ்வாறும் அரசியலில் நடக்குமா என என்னத்தோன்றுகின்றது. 
VIDEO : ஹக்கீமோடு ஒப்பிடும்பொழுது தேசிய தலைமைக்கு மிகத்தகுதியானவர் ரிசாட்டே பதுர்தீனே... VIDEO :  ஹக்கீமோடு ஒப்பிடும்பொழுது தேசிய தலைமைக்கு மிகத்தகுதியானவர் ரிசாட்டே பதுர்தீனே... Reviewed by Madawala News on July 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.