இனவாதத்தினை மூலதனமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி .


(எஸ்.அஷ்ரப்கான்)
நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள்
மற்றும் மதகுருக்கள் இனவாதம் பேசி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.


ஏறாவூர் பற்று உறுகாமம் மற்றும் புதூர் பிரதேசங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்ககு பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் இருந்து நாடு நல்லதொரு நிலைக்கு திரும்பும் இக்காலகட்டத்தில் நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டிய மதகுருக்களும், அரசியல்வாதிகளும் வெறுப்புப் பேச்சுக்களை பேசி இனரீதியான மோதல்களை ஏற்படுத்துவதற்கு முனைகின்றனர். இவ்வாறான செயற்பாட்டில் ஒருசில மதகுருக்களும், அரசியல்வாதிகளுமே செயற்பட்டுக்கொண்டிருக்கின்னர். இது மிகவும் கவலையான விடயமாகும்

அண்மையில் எமது நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் பின்னர் இந்த நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சட்டம் தனிநபர்களின் கைகளில் சென்றதனையும், தனிநபர்கள் சட்டத்தினை கையிலெடுத்து செயற்பட்டதனையும் அவதானிக்க முடிந்தது. அதுமாத்திரமல்ல நாட்டில் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதில் கூட பாரிய சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளினால் எமது நாட்டு மக்களும், நாட்டினுடைய பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் பல்வேறுவகையான பிரச்சினைகள் எழுவது வழக்கமாகும். அவற்றை பேச்சுவார்த்தை ஊடாக அல்லது சட்டரீதியாக அனுகி தீர்ப்பதற்கு சகல தரப்பினரும் முன்வரவேண்டும். அதனைவிடுத்து ஆர்ப்பாட்டங்களை அல்லது போராட்டங்களை நடாத்தி எதனையும் சாதிக்க முடியாது. அதற்கு கடந்தகால வரலாறுகள் எமக்கு படிப்பினையாகவுள்ளது.

குறிப்பாக இந்த நாட்டிலே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் வெறுப்புப் பேச்சுக்களை பேசுகின்ற நபர்கள் யாராகவிருந்தாலும் தராதரம் பாராது அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இனங்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களையும், இனரீதியான பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியும்.

நாட்டில் சிறந்த பொருளாதாரக்கொள்கையினை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய செய்ய வேண்டிய அரசியல் தலைவர்கள் கூட இன்று ஆட்சியில் அமர்வதற்காக இனவாதத்தினை பேசிவருகின்றனர். இனவாத்தினை மூலதனமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளலாம் என அவர்கள் என்னிக்கொண்டு விசமப்பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். நாட்டில் ஏதாவது ஒரு தேர்தல் நடைபெரும் வரையில் இனவாத செயற்பாடுகள் தொடரும் அச்சம் காணப்படுகிறது.

இவ்வாறான இனவாத செயற்பாடுகளினால் நாட்டினுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, குறிப்பாக வியாபாரங்கள், கொடுக்கல்வாங்கல்கள், நிருவாக செற்பாடுகள் என அனைத்து நடவடிக்கைகளும் இனரீதியாக பிரிக்கப்பட்டு பார்க்கப்படுகின்றது. இதனால் நாட்டில் ஏற்பட்டிருந்த சமாதானம், நல்லிணக்கம் என்பன சீர்குழைந்துள்ளது. இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு எந்த அரசியல் தலைவரும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை.

இன்று நாட்டில் ஒருபுறம் வரட்சி மறுபுறம் இனவாதம் தலைதூக்கியுள்ள சூழ்நிலையில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்களும், மதகுருக்களும் இனவாதத்தினை பேசுவது நாட்டினை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் அப்பாவி மக்கள் அகப்பட்டுக்கொண்டு செய்வதறியாது அல்லல்படுவதனையிட்டு மிகவும் கவலையாகவுள்ளது. இந்த விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். இன்று மக்கள் மததியில் நல்ல செய்திகளை பரப்பி நல்லிணக்கத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் உழைக்க வேண்டிய சில ஊடகங்கள் கூட இனவாத அரசியல்வாதிகளுக்கு பி்ன்னால் கைகோர்த்துக்கொண்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இனவாதத்தினை மூலதனமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி . இனவாதத்தினை மூலதனமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி . Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.