கண்டி ,மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.

கண்டி ,மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப்
போட்டி 06/07/2019 சனிக்கிழமை கல்லூரி மைதானத்தில் கல்லூரி  அதிபர் ஜனாப் ஏ.ஏ.எம்.ஜாஸில் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் பிரதம அதிதியாக பாததும்பரை பிரதேச சபை செயலாளர் திருமதி. பிரியானிகலந்து கொண்டார். பிரதம அதிதி தனது உரையிலே , இப்பாடசாலை  ஒரு வளர்ந்துவரும் முன்னனி சர்வதேசப்பாடசாலை என்பதுடன் தற்போதைய சூழ்நிலையில் பல்லின மக்களும் ஒற்றுமையாக  கல்வி பயிலும் இடமாக இப்பாடசாலை இருப்பது பாராட்டத்தக்க விடயமாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.


சின்னஞ் சிறார்களின் அனைத்து விளையாட்டுக்களும்  அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தன.போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களிற்கு சான்றிகள்களும் , பரிசில்களும் வழங்கி  வைக்கப்பட்டன.கண்டி ,மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி. கண்டி ,மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி. Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5