அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது..

அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்ததாக பிரதமர்
ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி தொகுதிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்விலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு நாவலப்பிட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன்போது 1200 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது.. அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது.. Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5