சகல மத மாற்றுத்திறனாளிகளின் ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா !!


மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய 12ஆம் ஆண்டு நிறைவை
முன்னிட்டு ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா ஹியூமன் லிங்க் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல் கானின் தலைமையில் இன்று ஹியூமன் லிங்க் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டார். அத்துடன் பல முக்கிய பிரமுகர்களும், விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டு கலாச்சார விழாவில் மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகள் வளப்படுத்தல் நிலையம், காரைதீவு கமு/கமு சண்முகா மகா வித்தியாலயம், அம்/ உஹன கனிஸ்ட வித்தியாலயம் என்பன கலந்து கொண்டன.

விசேட தேவையுடைய தமிழ்,சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய அவசியம், மாற்று திறனாளிகள் இந்த சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியம், அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி அதிதிகள் வலியுறுத்தி பேசினர்.

(நூருள் ஹுதா உமர்.)

சகல மத மாற்றுத்திறனாளிகளின் ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா !! சகல மத மாற்றுத்திறனாளிகளின் ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா !! Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.