சிறுபிள்ளை திருமணம் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையா?


இலங்கையின் இனவாத ஊடகங்களும், படித்தவர்களும் பாமரர்களும், வயது வித்தியாசமின்றி ஏதோ முஸ்லிம்கள்
எல்லோரும் 10 வயது 15 வயது சிறுமிகளை திருமணம் முடிப்பதாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் சிறுமிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டி அவர்கள்  படுகின்ற கஷ்டங்கள் எண்ணிலடங்காது. சொல்லி மாளாது.

இலங்கையில் சிறு பிள்ளைகளை யார் அதிகம் திருமணம் செய்து இருக்கிறார்கள்? முஸ்லிம்கள் மட்டும் தானா சிறுபிள்ளைகளை திருமணம் செய்திருக்கிறார்கள்? இவைகளுக்கெல்லாம் விடைகளை தருகிறது 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பை பார்க்கும் போது இவர்களது இந்த கண்ணீர் வெறும் முதலைக் கண்ணீர்தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இவர்களது இந்த வாதமெல்லாம் வெறும் காழ்ப்புணர்ச்சிதான், முஸ்லிம்கள் மீது கொண்ட வெறுப்பு தான் என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. முஸ்லிம் பெண்களது திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பவர்கள் இதையும் கொஞ்சம் கவனித்தால் நாட்டிலே நல்ல பல விஷயங்கள் நடக்கும்.முஸ்லிம் பெண்களை காப்பாற்றுவதற்கு முதல், காப்பாற்றப்பட வேண்டிய பல பெண்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.

இந்த 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 3530 பேர் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பெண்கள். அவர்களுள் 3204 பெண் பிள்ளைகள் சட்டப்படியான பதிவுத் திருமணத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் 2,200 பேர் (69%) சிங்களவர்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 471(14%). எஞ்சிய 17 வீதமானவர்கள் தமிழர்கள் மற்றும் பரங்கியர்கள். 18 வயதிற்கு குறைந்தவர்கள் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் மட்டும்தான் அல்லது முஸ்லீம்களுக்கு மட்டும்தான் என்றால் இந்த 2200 பேரும் எங்கிருந்து வந்தார்கள்? இது தவிர 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்  326 பேர் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் 216 பேர் சிங்களவர்கள்(66.2%). முஸ்லிம்கள் வெறும் 23 பேர்(7%) மாத்திரமே. எஞ்சிய 27 வீதமானவர்கள் ஏனைய இனத்தவர்கள். ஒரு நாட்டிலே ஒரு நீதி என்றால் எப்படி சம்பிரதாய முறைப்படி இந்த 216 பேர் திருமணம் செய்தார்கள்? இது எப்படி சாத்தியமானது?

15 ‌‌தொடக்கம் 19 வயது வரை உள்ள சிறுவர்கள்  104 176 பேர் திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுள் பெண் பிள்ளைகள்  85,392 பேர் இருக்கிறார்கள். இதிலே 87 ஆயிரத்து 233 பேர் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி சட்டப்படி திருமணத்தை பதிவு செய்தவர்களுள் 62 ஆயிரத்து 630 பேர் சிங்களவர்கள்(71.5%). ஆனால் முஸ்லிம்கள் 11 ஆயிரத்து  916 மாத்திரமே (13%). மீதி 15 வீதமானவர்கள் மற்ற இனத்தவர்கள். இவர்களும் சட்டப்படி பதிவு திருமணம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த நாட்டிலே 18 வயதுக்கு குறைந்த அதிகளவான சிறுவர்-சிறுமியர்கள் திருமணம் முடித்து இருப்பது முஸ்லிம் அல்லாத மற்றைய இனத்து அதிலும் குறிப்பாக சிங்கள சிறுமிகள் தான். ஆனால்  இந்த நாட்டிலே முஸ்லிம்கள் மாத்திரம் தான் சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதாக ஊடகங்களிலே பாசாங்கு செய்கிறார்கள். பெண்ணுரிமை போராளிகளே! சிறுவர்கள் மீது அன்பு கொண்டவர்களே! முஸ்லிம் பெண்களை காப்பாற்ற புறப்பட்டவர்களே! இப்பொழுது உங்கள் வாய்க்கொழுப்பு சீலையால் வடிகிறது அதை துடைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் அதன் பின் முஸ்லிம்களை திருத்திக் கொள்ளலாம்.

பிற் குறிப்பு இதிலே திருமணம் செய்யாமல் கூடி வாழ்வவர்கள், சின்னவீடு செட்டப் செய்து இருப்பவர்கள், யௌவன காலத்தில் ஆண் நண்பர்களோடு பாலியல் உறவு கொள்பவர்கள், கள்ளத் தொடர்பில் இருப்பவர்கள், பாய் ஃபிரண்ட் கேர்ள் பிரண்ட் என்று அலைபவர்கள் யாருமே உள்ளடக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.  அவைகளையும் உள்ளடக்கி இருந்தால் கணக்கு வேறு மாதிரி இன்னும் ஒரு படி மேலே இருந்திருக்கும்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.

சிறுபிள்ளை திருமணம் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையா? சிறுபிள்ளை  திருமணம் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையா? Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.