புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கை ஆரம்பமானது.


புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திண்மக்கழிவு மீள்சுழற்சி திட்டத்திற்கு
குப்பைகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு மாநகர சபையின் குப்பைகள் அங்கு கொண்டு செல்லப்படுவதாகவும் நேற்று(16) 10 குப்பை சேகரிக்கும் வாகனங்களின் மூலம் அங்கு கழிவுகள் கொண்டுசெல்லப்பட்டதாகவும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் சமூக நிபுணர் நிமல் பிரேமதிலக தெரிவித்துள்ளார்.

அருவக்காலு பகுதிக்கு புகையிரதம் மூலம் குப்பைகளை கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் அதற்கான புகையிரதங்கள் தயாராகும் வரையில் லொறிகள் மூலம் புத்தளம் வரை கொண்டுசெல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கழிவு மீள் சுழற்சி திட்டம் வரை நிர்மாணிக்கப்படும் புகையிரத பாதையின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் வருடம் மார்ச் மாதமளவில் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த பகுதியில் நாளொன்றுக்கு 600 டொன் குப்பைகள் கொட்ட முடியும் எனவும் எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் ஆகும் போது 1200 டொன் குப்பைகளை கொட்ட முடியுமாகுமெனவும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் சமூக நிபுணர் நிமல் பிரேமதிலக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : டெய்லி சிலோன்
புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. புத்தளம் அருவக்காலு   பிரதேசத்தில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. Reviewed by Madawala News on July 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.