ஆடை விவகாரத்தில் புவக்பிட்டிய பாடசாலையில் இருந்து முஸ்லிம் ஆசிரியைகள் வெளியானதால் ஏற்பட்டுள்ள ஆசிரிய பற்றாகுறைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.


அவிசாவெல்ல - புவக்பிட்டிய சீ.சீ. தமிழ் மஹா வித்தியாலத்திற்கான ஆசிரிய பற்றாகுறை தொடர்பாக தம்மால் எதனையும்
செய்ய முடியாது என்று மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல்21 தாக்குதலை அடுத்து முழுமையாக முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த பாடசாலை இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட போது, பாதுகாப்பு சோதனைக்கு இடமளிக்கவில்லை என்று தெரிவித்து முஸ்லிம் ஆசியர்களுடன், பாடசாலை மாணவர்களின் பெற்றோர் முரண்பட்டனர்.

இதனால் ஆசிரியர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி குறித்த பாடசாலையில் சேவையாற்றிய 11 முஸ்லிம் ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு நியமித்தார்.

800 மாணவர்களைக் கொண்ட அந்த பாடசாலைக்கு 56 ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்ற போதும், தற்போது 40 ஆசிரியர்கள் மாத்திரமே இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஆடை விவகாரத்தில் புவக்பிட்டிய பாடசாலையில் இருந்து முஸ்லிம் ஆசிரியைகள் வெளியானதால் ஏற்பட்டுள்ள ஆசிரிய பற்றாகுறைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆடை விவகாரத்தில்  புவக்பிட்டிய பாடசாலையில் இருந்து முஸ்லிம் ஆசிரியைகள் வெளியானதால் ஏற்பட்டுள்ள ஆசிரிய பற்றாகுறைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.