பாடசாலையில் டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து சேவா நூலும் மீட்பு.. பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.



பாடசாலையில் டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து  சேவா நூலும் மீட்பு.. பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

கஹடகஸ்திகிலிய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலிருந்து டெனேட்டர்கள் மூன்றும்
வெடிமருந்து செய்யப் பயன்படுத்தப்படும் சேவா நூலும் மீட்கப்பட்டுள்ளமையால், பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் ஐ.எம் மஹிந்த தெரிவித்தார்.

பாடசாலை திறக்கப்பட்டதன் பின்னர், இன்று காலை  பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இணைந்து சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டவாறு கிடந்த  மூன்று டெடனேட்டர்களும், சேவா நூலும் காணப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தின​ர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், எனினும் ​வேறு பொருள்கள் எவையும் அங்கு கிடைக்கப்பெறவில்லையென்றும், பாடசாலை அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் பெற்றோருடன்  மீள திருப்பியனுப்பப்பட்டதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து சேவா நூலும் மீட்பு.. பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. பாடசாலையில் டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து  சேவா நூலும் மீட்பு.. பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.