இரண்டு வருடங்களுக்கு முன் சகோதரன் உயிரை விட்ட இடத்தில் இன்று தம்பி...


இரண்டு வருடங்களுக்கு முன் சகோதரன் உயிரை விட்ட இடத்தில் இன்று தம்பி.. முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வீட்டுக்கு அண்மையில் உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்த இளைஞரின் வீட்டாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார்  மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் .

குறித்த இளைஞரின் சகோதரன் ஒருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இதே இளைஞர் தூக்கில்   தொங்கி இறந்த அதே மரத்திலேயே தூக்கில் தொங்கி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு வருடங்களுக்கு முன் சகோதரன் உயிரை விட்ட இடத்தில் இன்று தம்பி... இரண்டு வருடங்களுக்கு முன் சகோதரன் உயிரை விட்ட இடத்தில் இன்று தம்பி... Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5