இலங்கை அரசின் அலட்சியமே தாக்குதலுக்கு முழுக்காரணம்!!
- ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு 
சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே
அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"இவ்வருட இறுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தல் மிக முக்கியமான தீர்மானமிக்க தேர்தலாக அமையவுள்ளது.

இந்தத் தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகள் நிச்சயிக்கப்படும் என்ற பின்னணி காணப்படுகின்றது.

இதன் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பெரும்பான்மைத் தீவிரவாதம் குறித்தும் கலந்துரையாடினோம்" - என்றார். 
இலங்கை அரசின் அலட்சியமே தாக்குதலுக்கு முழுக்காரணம்!! இலங்கை அரசின் அலட்சியமே  தாக்குதலுக்கு முழுக்காரணம்!! Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5