IS தீவிரவாதத்தினை ஒழித்துக்கட்வே அமெரிக்காவின் உதவியை பெற உத்தேசித்துள்ளோம் ; பிரதமர்



IS ஐ ஒழித்துக்கட்வே அமெரிக்காவின் உதவியை பெறுகிறோம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


கொழும்பில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, உயிருடன் இருக்கக் கூடிய சகலரும் பாதுகாப்புத் தரப்பினரின் பிடியில் உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவித குற்றச் செயல்களுடனும் சம்பந்தப்படாதவர்களும் அவர்களிடையே உள்ளனர்.

அவர்களில் விடுதலை செய்ய முடியுமானவர்களை விடுதலை செய்யுமாறும், பிணையில் செல்ல முடியுமானவர்களை பிணையில் விடுவிக்குமாறும், வெவ்வேறு குற்றச் செயல்களுடன் அல்லது சட்ட விரோத குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் இருப்பதாயின், அது தொடர்பில் வழக்குகளைத் தாக்கல் செய்யுமாறும் நாம் சட்ட மா அதிபரிடம் தெளிவாக கூறியுள்ளோம்.

இதுதான் செய்ய வேண்டியுள்ளது. இதுவல்லாது வேறு எதுவும் செய்யப்பட வேண்டியதில்லையெனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
IS தீவிரவாதத்தினை ஒழித்துக்கட்வே அமெரிக்காவின் உதவியை பெற உத்தேசித்துள்ளோம் ; பிரதமர் IS தீவிரவாதத்தினை  ஒழித்துக்கட்வே அமெரிக்காவின் உதவியை பெற உத்தேசித்துள்ளோம் ; பிரதமர் Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.