கியூபா நாட்டின் கிராமமொன்றை மீளமைப்பதற்காக, 50,000 அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்குகிறது இலங்கை.


சூறாவளி காரணமாக, சேதமடைந்த கியூபா நாட்டின் கிராமமொன்றை மீளமைப்பதற்காக, 50,000
அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாதம் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி-ரெக்லாவுக்கு அண்மையிலுள்ள கிராமமே முற்றாக சேதமடைந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படும், நல்லுறவை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தாண்டுடன் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட நிறைவையொட்டியும்  நிதி நன்கொடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த இந்த ​யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கியூபா நாட்டின் கிராமமொன்றை மீளமைப்பதற்காக, 50,000 அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்குகிறது இலங்கை.  கியூபா நாட்டின் கிராமமொன்றை மீளமைப்பதற்காக, 50,000 அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக  வழங்குகிறது இலங்கை. Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.