இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படுகிறது.


இலங்கை ரயில் சேவையை அத்தியாவசியத்  சேவையாக மாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை
போக்குவரத்து அமைச்சு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை ரயில்வே சேவையில் ஓய்வுப்​ பெற்ற ரயில்வே சாரதிகள், கட்டுபாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள், சமிக்ஞை பரிசோதகர்கள், வீதி பரிசோதகர்கள், ஆகியோரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை  எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து நாரஹேன்பிட்டி- சாலிகா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோரின் பங்களிப்பின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் எனவே இதில் ஓய்வுப்பெற்ற மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்குரியவர்கள் வந்து இணைந்துக்கொள்ளுமாறும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்துள்ளார்.
இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படுகிறது. இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய  சேவையாக மாற்றப்படுகிறது. Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.